என் மலர்

  நீங்கள் தேடியது "Karnataka elections"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி தொடர்பான ஆடியோ போலியானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #KarnataElection2018 #Congress #AudioRelease #ShivaramHebbar

  பெங்களூரு:

  கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர், 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

  கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

  ராய்ச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பாஜகவை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், பணம், மந்திரி பதவி மற்றும் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்திக்க வைப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என பாஜக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்தார். 

  அந்த ஆடியோ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாள் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தநாள் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

  இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் நேற்று தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி தன்னை பற்றி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது என தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

  தன்னையும், தனது மனைவியையும் பாஜகவினர் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்மனைவியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பாஜகவினர் பேசியதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது. அதுபோன்ற எந்தவிதமான தொலைபேசி அழைப்புகளையும் என் மனைவி எதிர்கொள்ளவில்லை. அந்த ஆடியோ டேப்பில் உள்ள பெண்ணின் குரலும் என் மனைவி உடையது அல்ல. இதுபோன்ற ஆடியோ டேப்பை நான் கண்டிக்கிறேன். 

  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KarnataElection2018 #Congress #AudioRelease #ShivaramHebbar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்த எடியூரப்பா இதற்கு முன்னர் நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns #Yeddyurappa

  பெங்களூரு:

  கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

  அதன்படி நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டமன்றம் மீண்டும் கூடியபோது எடியூரப்பா தனது உரையை வாசித்தார். 

  அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

  எடியூரப்பா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது இது முதல்முறையல்ல. அவர் இதற்கு முன் ஐந்து முறை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளார். 

  கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக, மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஆட்சியமைத்த ஒரு வாரத்திற்குள் மஜத கட்சி தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் முறையாக எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் ஆறு மாதத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. 

  அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இந்த முறைப்போல பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சியமைக்க 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, பாஜக சார்பில் தேர்தலில் எதிர்கொள்ள வைத்தது. அதில் அவர்கள் வெற்றி பெற்றதன்மூலம் பாஜக மீண்டும் அட்சியமைத்தது. அதைத்தொடர்ந்து 2008-ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

  அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து பாஜகவில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் விலகினர். இதனால் 2010, அக்டோபர் 11-ம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றியை அப்போதைய ஆளுநர் பரத்வாஜ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

  இதையடுத்து மீண்டும் அக்டோபர் 14-ம் தேதி நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். இதில் எடியூரப்பா வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டார். அதன்பின் நேற்று ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருந்தார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns #Yeddyurappa
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்து 3 தடவை வெற்றி பெற்றார். இந்த நிலையில் 5-வது முறையாக சந்திக்க உள்ளார்.#KarnatakaElections2018 #yeddyurappa
  கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பா இதற்கு முன்பு 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பு சோதனையை சந்தித்துள்ளார். 2007-ம் ஆண்டு அவர் முதல் முதலாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். அப்போது கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆதரவு கொடுக்க மறுத்ததால் 8 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த எடியூரப்பா ஆட்சியைப் பறிகொடுத்தார்.

  2008-ம் ஆண்டு ஜூன் மாதம் எடியூரப்பா இரண்டாவது நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். அப்போது அவரது ஆட்சி நீடிக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. “ஆபரேஷன் கமலா” திட்டத்தின்படி எடியூரப்பா அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மிக எளிதாக வெற்றி பெற்றார். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடியூரப்பாவை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி அப்போதைய (காங்கிரஸ்) கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். 18 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.

  அப்போது, தற்போதைய தற்காலிக சபாநாயகர் போப்பையா தான் சபாநாயகராக இருந்தார். அவர் அதிரடியாக 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை தகுதி இழக்க செய்து உத்தரவிட்டார். பிறகு குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக அறிவித்தார். 2010-ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

  ஆக இதுவரை 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த எடியூரப்பா 3 தடவை வெற்றி பெற்றார். ஒரே ஒரு தடவைதான் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 5-வது தடவையான இன்று அவருக்கு வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியைத் தழுவுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.#KarnatakaElections2018 #yeddyurappa
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஐதராபாத் சென்ற காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு நகருக்கு திரும்பினர். #KarnatakaCMRace

  ஐதராபாத்:

  கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். 

  இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.

  இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்று முன்தினம் இரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், நேற்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் சென்றனர். அவர்கள் அங்குள்ள இரண்டு சொகுசு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

  சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.  இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் இரவோடு இரவாக பெங்களூரு நகருக்கு திரும்பினர். குமாரசாமி தலைமையிலான மஜத எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் பெங்களூரு நகருக்கு வந்தனர். #KarnatakaCMRace
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #KarnatakaCMRace

  ஐதராபாத்: 

  கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். 

  இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.

  இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்று முன்தினம் இரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், நேற்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் சென்றனர். அவர்கள் அங்குள்ள இரண்டு சொகுசு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

  சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.

  இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் எம்.எல்.ஏக்கள் மீண்டும் தங்களிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக காங்கிரஸ் - மஜத கூட்டணியின் 118 எம்.எல்.ஏக்கள் அடங்கிய பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. #KarnatakaCMRace
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற பட்டுள்ளதால், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து வெளியேறினர். #KarnatakaCMRace

  பெங்களூரு:

  கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

  காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.

  இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில், சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து நேற்றிரவு வெளியேறினர். அவர்களில் சிலர் கேரளா மாநிலம் கொச்சிக்கும், சிலர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகருக்கும் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KarnatakaCMRace
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.#KarnatakaElections2018 #BJP #Congress #JDS
  பெங்களூர்:

  கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது.

  அதற்கு 104 எம்.எல். ஏ.க்களே உள்ளனர். மெஜாரிட்டிக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

  2 சுயேட்சைகளில் ஒருவரான சங்கர் காலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் மாலையில் காங்கிரசை ஆதரிப்பதாக பல்டி அடித்தார். இப்போது இரு சுயேச்சைகளுமே காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர். இதனால் காங்கிரசின் பலம் 78-ல் இருந்து 80 ஆக அதிகரித்துள்ளது.

  இதற்கிடையே எதிர் அணியில் இருந்து 8 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவைப் பெற பா.ஜனதா மறைமுகமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதற்காக வருமான வரித்துறை சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

  இந்த நிலையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 3 ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களும் மாயமாகி விட்டதாக பெங்களூரில் தகவல் பரவியது. இதனால் காங்கிரஸ், ஜே.டி.எஸ். வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.  இதையடுத்து எம்.எல். ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேரம் பேசுவதை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நேற்று பகலில் பஸ்கள், கார்களில் அழைத்துச் செல்லப்பட்டு ராமநகரம் அருகே பிடதியில் உள்ள கோல்டன் ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

  ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க் கள் பெங்களூரில் கவர்னர் மாளிகை அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களை பாதுகாக்கும் பொறுப்பு முன்னாள் மந்திரி டி.கே.சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி மேல்- சபை தேர்தலின் போது கட்சி தாவாமல் இருக்க குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கோல்டன் ரிசார்ட் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.

  அபபோது மந்திரியாக இருந்த சிவகுமார்தான் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பை கவனித்தார். இதற்காக சிவகுமார் வீடு - அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.#KarnatakaElections2018 #BJP #Congress #JDS
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகா முதல்வராக இன்று பதவி ஏற்கும் எடியூரப்பா ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை நாளை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa
  புதுடெல்லி:

  கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரவிலேயே விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 

  இதையடுத்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நள்ளிரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் காங்கிரஸ் மனுவின் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது.  உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

  ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர். காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.

  காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். அதன்பின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் பா.ஜ.க. வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

  இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

  பதவியேற்பை மாலை 4:30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும், ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அளிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிங்வி வேண்டுகோள் விடுத்தார். 

  ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி வாதாடிய நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் ஆய்வில் கீழ்தான் வரும் என நீதிபதி பாப்டே கூறினார். 

  சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தீர்ப்பை வாசித்தார். ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களின் நகல்களை நாளை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தகட்ட விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும், என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகா முதல்வராக இன்று எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa

  புதுடெல்லி:

  கர்நாடகாவில் நேற்று முன்தினம் வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது.  

  இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 

  இதையடுத்து காங்கிரஸ் அளித்த மனு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, பதிவாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் அளித்த மனுவை இரவே விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு காங்கிரசின் மனுவை விசாரித்தது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

  அப்போது ஆளுநர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநர் உத்தரவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என வாதாடினார். 

  காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடி, பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். 

  சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

  அதன்பின் பா.ஜ.க. தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிரான காங்கிரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆளுநரை அவரது பணியை செய்யவிடுங்கள், நீதிமன்றம் அவருடைய வேலைகளில் தலையிட வேண்டாம். ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால், எந்த சட்டமும் இயற்றப்படாது. குடியரசு தலைவரும், ஆளுநரும் எந்த நீதிமன்றத்திலும் பதில் சொல்ல தேவையில்லை, என கூறினார்.

  இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, குடியரசு தலைவர் முடிவிலேயே நீதிமன்றம் தலையிட முடியும் என்பதால் ஆளுநர் முடிவிலும் தலையிடலாம் என வாதாடினார். #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress

  பெங்களூர்:

  கர்நாடகாவில் நேற்று முன்தினம் வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது.  

  இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 

  இதையடுத்து காங்கிரஸ் அளித்த மனு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, பதிவாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் அளித்த மனுவை இரவே விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு காங்கிரசின் மனுவை விசாரித்தது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

  அப்போது ஆளுநர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநர் உத்தரவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என வாதாடினார். 

  காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஜார்கண்ட் மற்றும் கோவாவில் நடந்த விவகாரங்களை சுட்டிக்காட்டி வாதாடினார். அவர், 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்புக்கு விரோதமானது. நாங்கள் ஆளுநரை எதிர்க்கவில்லை, அவரின் முடிவை தான் எதிர்க்கிறோம், என கூறினார்.

  எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதற்கு சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் என சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி சிங்வி வாதாடினார். தொடர்ந்து வாதாடிய சிங்வி, டெல்லி, கோவா உட்பட 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது. டெல்லியில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும் ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. குடியரசு தலைவர் முடிவிலேயே நீதிமன்றம் தலையிட முடியும். எனவே ஆளுநர் முடிவிலும் நீதிமன்றம் தலையிடலாம், என அவர் கூறினார்.

  ஆளுநர் முடிவில் தலையிட வேண்டாம், பதவி ஏற்பு விழாவை தற்காலிகமாக ஒத்திவையுங்கள் என சிங்வி கோரிக்கை விடுத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress

  பெங்களூர்:

  கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது.  

  இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜ்பவனில் இன்று காலை 9.00 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மனுவை அவசர வழக்காக இரவே விசாரிக்க, தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்குமாறும் பதிவாளரிடம் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். 

  இதையடுத்து காங்கிரஸ் அளித்த மனு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, பதிவாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் அளித்த மனுவை இரவே விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எலஸ்.ஏ.போப்டே ஆகிய  3 நீதிபதிகள் கொண்ட அமர்வு காங்கிரசின் மனுவை விசாரிக்கிறது. #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress