என் மலர்

  செய்திகள்

  முதல்வராக 5வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா
  X

  முதல்வராக 5வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்த எடியூரப்பா இதற்கு முன்னர் நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns #Yeddyurappa

  பெங்களூரு:

  கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

  அதன்படி நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டமன்றம் மீண்டும் கூடியபோது எடியூரப்பா தனது உரையை வாசித்தார். 

  அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

  எடியூரப்பா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது இது முதல்முறையல்ல. அவர் இதற்கு முன் ஐந்து முறை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளார். 

  கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக, மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஆட்சியமைத்த ஒரு வாரத்திற்குள் மஜத கட்சி தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் முறையாக எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் ஆறு மாதத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. 

  அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இந்த முறைப்போல பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சியமைக்க 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, பாஜக சார்பில் தேர்தலில் எதிர்கொள்ள வைத்தது. அதில் அவர்கள் வெற்றி பெற்றதன்மூலம் பாஜக மீண்டும் அட்சியமைத்தது. அதைத்தொடர்ந்து 2008-ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

  அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து பாஜகவில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் விலகினர். இதனால் 2010, அக்டோபர் 11-ம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றியை அப்போதைய ஆளுநர் பரத்வாஜ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

  இதையடுத்து மீண்டும் அக்டோபர் 14-ம் தேதி நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். இதில் எடியூரப்பா வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டார். அதன்பின் நேற்று ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருந்தார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns #Yeddyurappa
  Next Story
  ×