search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confident"

    • ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.26.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடநாடு ஊராட்சி மன்ற அலுவலகம், தூனேரி ஊராட்சி அணிக்கொரை கிராமத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடம் என மொத்தம் ரூ.46.80 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டை புதுப்பிக்கும் வகையில் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் காா் நிறுத்துமிடம் அமைக்க ரூ.18 கோடியும், புதிய மாா்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்ட ரூ.18 கோடியும் என மொத்தம் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    மலை மாவட்ட மக்களை சிறப்பிக்கும் வகையில் ஊட்டி 200-ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆர். கணேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாராஜ், குன்னூா் கோட்டாட்சியா் பூஷ்ண குமாா், ஊட்டி நகராட்சி துணைத் தலைவா் ரவிக்கு மாா், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாதன் ,கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதாசிவமணி, கடநாடு ஊராட்சி உறுப்பினர் சிவமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அரியலூரில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உறுதி அளித்தார்
    • பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டராக ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்தும் வழங்கி, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், அனைத்தும், அனைவருக்கும் தங்குதடையின்றி தகுதியுடைய நபர்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.2005ம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றி பெற்ற ஆனிமேரி ஸ்வர்ணா, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், கருர் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலாளராகவும், டாஸ்கோ மற்றும் சிட்கோ பொதுமேலாளராகவும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    • தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..
    • ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள அரசாங்கம், ராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 1.5 லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டனர்.

    போரில் படுகொலை செய்ய ப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசாங்கம், ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    ஈழப் போரின் போது காணாமல் போன சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்ட பல்லாயி ரக்கணக்கா னோரின் உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை நிற்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் தலைமை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தலைவர் போராசிரியர் பாரி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் சேவியர், ஆதித்தமிழர் இளைஞர் பேரவை பொறுப்பாளர்கள் பிரேம்குமார் நிவாஸ், சிவா மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கணபதி, சத்யா, வெண்ணிலா , கண்ணன், தங்கராசு, ரெஜினால்டு ரவீந்திரன், செல்வம், மனோகர், தாமரைச்செ ல்வன், கஸ்தூரி, கோதண்ட பாணி, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம்.
    “தன்னம்பிக்கையுடன் சிலரது வரலாறே உலகச் சரித்திரம் ஆகும். ஒரு மனிதனோ, நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனேயே அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. தன்னம்பிக்கை என்பது வாழ்வின் ஒரு அங்கமாகும்”

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்று கூறுவார் திருவள்ளுவர். அதாவது கொக்கைப் போல வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வரும் போது மிக வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். நம் அவ்வைப்பாட்டி “மடக்குத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்கிறார். வாய்ப்புக்காக காத்திருப்பது உணவுக்காக காத்திருக்கும் கொக்கு, மீனைக் கண்டதும் எப்படி வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறதோ அதேபோல் ஒவ்வொருவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து.

    அவ்வையார் கூறுவது போல் நாம் வாடி இருக்க வேண்டாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். வாடி இருப்பதற்கு நாம் கொக்கு அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேணடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம்.

    ஆபிரகாம் லிங்கன் காணாத தோல்வியா? தாமஸ் ஆல்வா எடிசன் பார்க்காத தோல்வியா? அவ்வளவு ஏன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப் படைத்தாரே தங்க மாரியப்பன் அவர் எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வெற்றிபெற்றார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இன்று சாதனையாளராகியிருக்கிறார் என்றால் அவருடைய விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் தான். இன்று அந்த தன்னம்பிக்கை எங்கே போயிற்று?. “உன்னை நீ பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமையுடையவனாகவே ஆகிவிடுவாய்”.

    சமீபத்திய நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது தன்னம்பிக்கைகள் தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறதோ? என நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு ஒரு அறையில் நான்கு நண்பர்கள். ஒருவனைத்தேடி ஒருவர் காலை நேரத்தில் வருகிறார். அவர் வரும் நேரத்தில் அந்த ஒருவன் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிடுகிறான். இப்படியே பத்து பதினைந்து நாட்கள் செல்கிறது. ஒரு நாள் அவன் மட்டும் மிகவும் சந்தோஷமா இருக்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கிறான்.

    அன்று இரவு அறைக்குத் திரும்பவில்லை. இவர்களும் எங்கேயாவது சென்றிருப்பான் வந்துவிடுவான் என்று நினைத்தார்கள். அடுத்த நாள் ஒரு போலீஸ்காரர் வந்து மூவரையும் அழைத்துச் செல்கிறார். தேடப்பட்ட அந்த நண்பன் தற்கொலை செய்து இறந்து கிடந்தான். பிரேதப் பரிசோதனை முடிந்து அவனை ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர் அவனுடைய அம்மா சொல்கிறார். ஏம்பா நீங்களாவது அவனிடம் பேசியிருக்கலாமே என்று? அப்போதுதான் மூவருக்கும் தெரிகிறது வீடு கட்டுவதற்காக வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தரமுடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று.



    இன்னொரு நிகழ்வு நம்மைப் பேரதிர்ச்சி செய்திருக்கிறது. சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரின் தற்கொலை. பல ஆயிரம் பேருடைய வாழ்வில் தன்னம்பிக்கை ஒளியேற்றிய சங்கர் தன் வாழ்வை தற்கொலையாக்கியிருக்கிறார். கல்லூரியில் ராகிங் செய்த பெண்ணையே பதினொரு ஆண்டுகள் காதலித்து, அவளின் உதவியால் 4 வருடங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோல்வியைத் தழுவி அதில் கிடைத்த பாடங்களையும் அனுபவங்களையும் கொண்டு ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்தி பல அதிகாரிகளை உருவாக்கிய ஒரு தன்னம்பிக்கைச் சரித்திரம். தன்னம்பிக்கையின்றி தற்கொலை செய்திருக்கிறது என்றால் எதற்காக?.

    இதோ அடுத்த தற்கொலை. முதுகுவலிக்கு தற்கொலை. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ? அதுவும் ஆசிரியர். அரசுப்பள்ளி ஆசிரியர். தன் முதுகுவலி தீரவில்லை என்று குடும்பத்திற்கு விஷம் வைத்து தானும் தற்கொலை செய்திருக்கிறார். என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு. அழகான மனைவி. அருமையான இரண்டு குழந்தைகள். அன்பான அம்மா இவர்கள் தான் என் உயிர் அவர்களை எப்படி விட்டுவிட்டு போவது என்று கொன்றிருக்கிறார். அவர்கள் அனுமதியோடு நடந்ததா இல்லை. இவர் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கிறாரா என்பது இனிதான் தெரியும்.

    இங்கேதான் உலகம் எப்படி இருக்கும்? என்றுகூட தெரியாமல் எச்.ஐ.வி பரப்பிவிட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தையும் அந்த அம்மாவும் இந்த உலகில் தானே வாழப்போகிறார்கள். தினம் தினம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைப் பாருங்கள். எத்தனை எத்தனை வியாதி. எவ்வளவு துன்பங்கள். கைகள் இழந்த, கால்கள் இழந்த, பார்வையற்ற, மனநலம் குன்றிய இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள். முதுகுவலிக்காக நடந்த தற்கொலை என்றால் இதைவிடக் கேவலம் வேறோன்றுமில்லை. ஆசிரியரே நீங்கள் தன்னம்பிக்கை இழந்து விட்டு தற்கொலை செய்து கொண்டீர்கள். உங்களை நம்பி வந்த பெண்ணையும் உங்கள் குழந்தையும் உங்களைப் படைத்த அம்மாவையும் ஏன் கொன்றீர்கள்? இது தான் அவர்கள் மேல் வைத்த பாசமா? உண்மையில் இவ்வுலகில் நீங்கள் வாழத் தகுதியில்லாதவர் தான்.

    இந்த மூன்று நிகழ்வுகளும் நம்மை யோசிக்க வைத்திருக்கின்றன. மூன்று நண்பர்களும் அந்த ஒருவனிடம் என்ன பிரச்சினை என்று பேசியிருந்தால் சிக்கல் தீர்ந்திருக்கும். 75 ஆயிரம் ரூபாய் என்பது இந்தக்காலத்தில் பெரிய தொகை இல்லை. மூவரும் ஏற்பாடு செய்திருக்கலாம் இல்லை கடன் வாங்கியவரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கலாம். பேசியிருந்தால் நண்பனைக் கட்டாயம் இழந்திருக்க மாட்டமார்கள். ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நண்பர்களிடமும் வீட்டுப் பெரியவர்களிடமும் பேசியிருந்தால் சிக்கல் அவிழ்ந்திருக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லாமல் உள்ள குடும்பம் ஏது? ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கி விடுகிறதே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில். இருவரும் மனம் விட்டுப் பேசியிருந்தால் கண்டிப்பாக சங்கர் சாகாமல் இருந்திருப்பார்.

    மூன்றாவதாக முதுகுவலிக்கு தற்கொலை செய்த ஆசிரியர். இவரின் தன்னம்பிக்கை தளர்ந்து போக யார் காரணம்? நோயா? நோயின் கொடூரமா? மருத்துவர்களா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா? என்ன பிரச்சினை என்றாலும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை கோழைகளின் ஆயுதம். முட்டாள்கள் தேர்ந்தெடுக்கும் பாதை கோமாளிகள் செய்யும் கோமாளித்தனம். அறிவிலிகள் செய்யும் அலப்பறை. தயவுசெய்து தற்கொலை செய்து கொள்ளா(ல்லா)தீர்கள். தற்கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இருக்கும் நீங்கள் வாழ்ந்துதான் பாருங்களேன். வாழ்க்கை வசமாகும்.

    மு.பாலகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர், கொம்மடிக்கோட்டை.
    கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் தங்களிடம் இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். #KarnatakaCMRace #Yeddyurappa #Karnatakafloortest
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை  இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதலில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின்னர் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீது மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதையொட்டி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடியூரப்பா இன்று ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறினார். மேலும், அமைச்சரவையை நாளை கூட்டி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

    மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசு வெற்றி பெற்றதும், மாலை 5 மணிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்றும் எடியூரப்பா கூறினார்.



    ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றும் கூறப்படுவதால் அவர்கள் பா.ஜ.க.விடம் விலைபோயிருக்கலாம் என தெரிகிறது.  #KarnatakaCMRace #Yeddyurappa #Karnatakafloortest
    ×