search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabilities"

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் கலந்து கொண்ட 260 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- 

    260 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியதில் 40 சதவிகிதம் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கப்பட உள்ளது. மேலும் செவித்திறன் குறைவாக கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செவித்திறன் மற்றும் கேட்கும் பயிற்சி கொண்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று பார்வை குறைபாடு கொண்ட படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறிய எழுத்தை பெரியதாக காண்பிக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு மற்றும் தனி தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
    மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. 39 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் 19 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
    சென்னை:

    மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 39 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 23 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4 பேர் அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களை தேர்ந்து எடுத்தனர். இவ்வாறு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை எடுத்தவர்கள் இந்த கலந்தாய்வுக்கு வரக்கூடாது.

    அதன் படி மீதம் உள்ள 19 பேர் மட்டுமே வந்தனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. 19 பேர்களில் 14 பேர் மட்டுமே இடங்களை தேர்ந்து எடுத்தனர். 5 பேர் எந்த இடமும் எடுக்கவில்லை.

    மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களில் நிரம்பாத இடங்கள் பொதுகலந்தாய்வுக்கு சென்றுவிடும். பொது கலந்தாய்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை)நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவகல்லூரிகளில் 15 மருத்துவ கல்லூரிகளில் தான் மருத்துவ பட்ட மேற்படிப்பு உள்ளன. இந்த கல்லூரிகளில் 864 இடங்கள் உள்ளது. இந்த இடங்கள் போக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்ற இடங்களில் 117 இடங்கள் திரும்பி வந்தன.

    இது தவிர 10 சுயநிதி மருத்துவகல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 122 உள்ளன. மொத்தம் 1103 இடங்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    22-ந் தேதி பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அரசு பல் மருத்துவ கல்லூரிகளில்23 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 96 இருக்கின்றன.

    பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு 22-ந் தேதி பகல் 2 மணியில் இருந்து கலந்தாய்வு நடக்கிறது. 23-ந் தேதி கலந்தாய்வு முடிவடைகிறது.
    சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்திடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் சிறப்பு முகாம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனுடைய நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    எனவே, சிவகங்கை வருவாய் கோட்டத்தினை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    ×