search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சிவகங்கையில் நாளை நடக்கிறது
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சிவகங்கையில் நாளை நடக்கிறது

    சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்திடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் சிறப்பு முகாம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனுடைய நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    எனவே, சிவகங்கை வருவாய் கோட்டத்தினை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×