search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees darshan"

    • குங்கும அர்ச்சனை, 10,008 நாமாவளி பூஜைகள் நடந்தது
    • சாமி வீதி உலாவில் பக்தர்கள் தரிசனம்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 70 -ம் ஆண்டு திருத்தேர் உற்சவ விழா முன்னிட்டு, வல்லாள கண்டி சம்ஹாரத் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 18-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன்தொடங்கிய விழா மகா சிவராத்திரி, மயான கொள்ளை, என தொடர்ந்து, 108- சுமங்கலிபெண்கள் கலந்துகொண்ட குங்கும அர்ச்சனை விழா, 10,008 நாமாவளி பூஜைகள் நடந்தது.

    நேற்று இரவு மருத்துவகுல சமுதாயத்தினர் சார்பில் வல்லாள கண்டி சம்ஹார விழா நடந்தது.

    ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில் அருகே களிமண்ணால் செய்யப்பட்ட வல்லாள கண்டன் உருவ பொம்மை முன்பாக, தெருக்கூத்து கலைஞர்களால் நாடகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பின்னர் வாணவேடிக்கை மற்றும் மேளதாளம் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா வந்தார்.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்தில் 3 முறை வலம் வந்து முருகப்பெருமான்-தெய்வானை அருள்பாலித்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி-அம்பாள் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதல் மற்றும் வைர தேரோட்டம் நடைபெற்றது.


    சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான்.

     


    விழாவின் சிகர நிகழ்ச்சி யாக தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு உற்சவர் சன்னதி யில் சுப்பிர மணியசுவாமி, தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங் காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி னார். பின்னர் சன்னதி தெரு வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் எழுந்தருளினர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத் தேரில்(மிதவை)தெய்வானை யுடன், சுப்பிரமணியசுவாமி பக்தர் களுக்கு அருள் பாலித்தார். காலை 11 மணியளவில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இன்று இரவு மின் ஒளியில் தெப்பத்தில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    அப்போது வான வேடி க்கைகளும் இசை கச்சேரி களும் நடை பெறும். பின்னர் மேளதாளங்கள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியிசுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வலம் வருவார். அப்போது சன்னதி தெருவில் உள்ள சொக்க நாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • மாமந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • 10.30 மணிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகாகும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மங்கள இசை, அனுக்கை, சங்கல்பம், கணபதிபூஜை, லட்சுமி ஹோமம்நவக்கிரக தீப ஆராதனைஇரண்டாம் கால யாக பூஜைகள்மூன்றாம் கால யாகசாலை பூஜைகள்மூலிகை ஹோமங்கள் பூஜைகள் நாடி சந்தானம்வருண பூஜை,வாஸ்து சாந்தி முதலிய சிறப்பு பூஜைகளும் இன்று அஷ்டபந்தன பூர்ணாகஹீதி கடம்புறப்பாடு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று.

    அதன் பின்னர் இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நாடி சந்தானம் தத்துவர்ச்சனை மூலிகை ஹோமங்கள் மகாபூர்ணா குதி, மகா தீபாரதனை கடம் புறப்பாடு ஆலய வலம் வருதல் முதலிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று பின் வாகன சுந்தரம் குருக்கள் கும்பாபிஷேக நீர் ஊற்றி 9.30 மணிக்கு பொற்கலை அய்யனார் ஆலய கும்பாபிஷேகம் அமைச்சர் அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று பின் 10.30 மணிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினைக்காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • தொண்டி, சாத்தூர், தேவகோட்டை கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள உந்தி பூத்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அலங்க ரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தூரில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    காலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக சாத்தூரப்பன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது. சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய ரெங்கநாத பெருமாளை திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசை விழா நடைபெற்றது.
    • வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெரு மானுக்கும் பால்,தயிர், சந்தனம், விபூதி,குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித பூக்கள் மற்றும் நகைகளால் வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் வைக்கப்பட்டி ருந்தது. இரவு 10.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர்.

    பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். இரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடு களை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். இன்று முதல் நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

    • புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் சனிக்கிழமை முன்னிட்டு வெங்கடேச பெருமாள் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    குடியாத்தம் அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 27 ஆம் ஆண்டு புரட்டாசி பெருவிழா நடைபெற்றது தொடர்ந்து மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வௌி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்தனர்
    • நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலையில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வௌி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிலில் வி.ஐ.பி.க்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்குவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. #Tirupati #TirupatiTemple
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி.க்களுக்கு நாள்தோறும் அதிகாலை முதல் காலை 10 மணி வரை 3 பிரிவுகளில் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த தரிசனம் வி.ஐ.பி.க்கள், நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

    இவற்றை கவனிப்பதற்கு தனித்தனியாக மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் வி.ஐ.பி.க்கள் வரும்போது அவர்களுக்குத் தேவையான தரிசன வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றனர்.

    இதுதவிர, வி.ஐ.பி.க்கள் தினசரி பிரேக் தரிசனத்திற்காக பலருக்கும் பரிந்துரை கடிதங்களை வழங்குகின்றனர். அவ்வாறு அவர்கள் வழங்கும் கடிதங்களை முதலில் சமர்ப்பிக்கப்படும் கடிதங்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் முன்னுரிமை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படுவது தற்போது அதிகரித்துள்ளதால் சாமானிய பக்தர்களுக்கு காலையில் 10 மணிக்கு மேல்தான் தரிசனம் வழங்கப்படுகிறது.

    இதனால் காத்திருப்பு அறையில் இருக்கும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு விரைவாக தரிசனம் வழங்குவதற்கு தேவஸ்தானம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக வி.ஐ.பி.க்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்குவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை குறைவதோடு, சாமானிய பக்தர்களுக்கு விரைவாக தரிசனம் அளிக்க முடியும் என்று தேவஸ்தானம் கருதுகிறது.

    எனினும், இந்த யோசனையை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் ஒப்புக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. #Tirupati  #TirupatiTemple
    ×