என் மலர்
உள்ளூர் செய்திகள்

அங்காள அம்மன் கோவிலில் வல்லாள கண்டி சம்ஹாரதிருவிழா
- குங்கும அர்ச்சனை, 10,008 நாமாவளி பூஜைகள் நடந்தது
- சாமி வீதி உலாவில் பக்தர்கள் தரிசனம்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 70 -ம் ஆண்டு திருத்தேர் உற்சவ விழா முன்னிட்டு, வல்லாள கண்டி சம்ஹாரத் திருவிழா நடைபெற்றது.
கடந்த 18-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன்தொடங்கிய விழா மகா சிவராத்திரி, மயான கொள்ளை, என தொடர்ந்து, 108- சுமங்கலிபெண்கள் கலந்துகொண்ட குங்கும அர்ச்சனை விழா, 10,008 நாமாவளி பூஜைகள் நடந்தது.
நேற்று இரவு மருத்துவகுல சமுதாயத்தினர் சார்பில் வல்லாள கண்டி சம்ஹார விழா நடந்தது.
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில் அருகே களிமண்ணால் செய்யப்பட்ட வல்லாள கண்டன் உருவ பொம்மை முன்பாக, தெருக்கூத்து கலைஞர்களால் நாடகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் வாணவேடிக்கை மற்றும் மேளதாளம் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா வந்தார்.
Next Story