என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி-பூதேவியருடன் பெருமாள்.
கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
- தொண்டி, சாத்தூர், தேவகோட்டை கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள உந்தி பூத்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அலங்க ரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தூரில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
காலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக சாத்தூரப்பன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது. சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய ரெங்கநாத பெருமாளை திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.






