search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Kumbabhishekam"

    • கடந்த 2-ந்தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
    • கொடிமரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்து வந்தன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. 18-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக அம்மன் கருவறை மண்டபம் முன்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

     பின்னர் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து எண்வகை மருந்து (அஷ்டபந்தனம்) சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜையும், அதன்பிறகு 4-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

    காலை 7.40 மணியில் இருந்து 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்கு மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • 6-ந்தேதி கும்பாபிஷேகம்
    • நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடைபெற்றது

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர், அய்யப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இந்த கோவிலில் உள்ள பழனி ஆண்டவர், ஐயப்பன் ஸ்ரீ ராமர் காசி விஸ்வநாதர் சனி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகள் புதுப்பிக்கப்ப ட்டுள்ளன.

    கும்பாபிஷே கத்தையொட்டி இன்று காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடைபெற்றது.

    நாளை தன பூஜை மகாலட்சுமி யாகம், 5-ந் தேதி 2-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது. 6-ந் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 9. 45 மணிக்கு கோவிலில் மகா கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது.

    இதில் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், தேவ பிரகாஷ் ஆனந்த சாமிகள்ஆகியோர் கலந்து கொண்டு அருளாசி வழங்குகின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா, முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், கவுன்சிலர் சந்திரசேகரன், மம்தா குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய நிர்வாகிகள் ஸ்ரீ வீரபத்திர சுவாமி நிர்வாக அறக்கட்டளை ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபையினர் , சைதாப்பேட்டை வாசிகள் செய்து வருகின்றனர்.

    • மாமந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • 10.30 மணிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகாகும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மங்கள இசை, அனுக்கை, சங்கல்பம், கணபதிபூஜை, லட்சுமி ஹோமம்நவக்கிரக தீப ஆராதனைஇரண்டாம் கால யாக பூஜைகள்மூன்றாம் கால யாகசாலை பூஜைகள்மூலிகை ஹோமங்கள் பூஜைகள் நாடி சந்தானம்வருண பூஜை,வாஸ்து சாந்தி முதலிய சிறப்பு பூஜைகளும் இன்று அஷ்டபந்தன பூர்ணாகஹீதி கடம்புறப்பாடு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று.

    அதன் பின்னர் இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நாடி சந்தானம் தத்துவர்ச்சனை மூலிகை ஹோமங்கள் மகாபூர்ணா குதி, மகா தீபாரதனை கடம் புறப்பாடு ஆலய வலம் வருதல் முதலிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று பின் வாகன சுந்தரம் குருக்கள் கும்பாபிஷேக நீர் ஊற்றி 9.30 மணிக்கு பொற்கலை அய்யனார் ஆலய கும்பாபிஷேகம் அமைச்சர் அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று பின் 10.30 மணிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினைக்காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×