search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Daredevils"

    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 50 பந்தில் 92 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த தவானுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2018 #DDvSRH
    ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் (92), கேன் வில்லியம்சன் (83) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஷிகர் தவான் 50 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் கேன் வில்லியம்சன் அவரை பாராட்டியுள்ளார்.



    போட்டிக்குப்பின் கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘பேட்டிங்கில் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம். எதிரணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். ஆனால் அது எப்போதுமே கடினமாக இலக்கு. முதல் பாதி ஆட்டத்தின்போது ஆடுகளம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார்.



    ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. இதில் நல்ல உத்வேகம் கிடைத்தது. ஷிகர் தவான் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தை வெளிக்காட்டினார்’’ என்றார்.
    டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #DDvSRH
    ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    பிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து, கேப்டன் வில்லியம்சன் இறங்கினார். தவானும், வில்லியம்சனும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    இறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 50 பந்தில் 92 ரன்களுடனும், வில்லியம்சன் 53 பந்தில் 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. #IPL2018 #DDvSRH
    ×