search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defence minister nirmala sitharaman"

    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி நான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தை சீரமைக்க எம்.பி தொகுதி நிதியாக ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என கோரவுள்ளேன்.

    வெள்ளத்தால் சேதமடைந்துள்ள விரைவில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க உள்ளேன்.

    மேலும், குடகு மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய கட்சியா என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் டெல்லியில் இஸ்லாமிய மத அறிஞர்கள் குழு ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது அவர்களிடம், காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சி என்று கூறியதாக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மத ரீதியிலான பிளவுபடுத்தலுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

    ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் குறித்த செய்திகளை பார்க்கும் பொழுது, நாட்டின் பழைய கட்சியான காங்கிரஸ் மீண்டும் தனது பழைய கொள்கையான இந்தியாவை பிரித்தாளும் மனப்பான்மைக்கு சென்று விட்டதாக தோற்றம் உருவாகிறது.



    ராகுலின் இந்த பேச்சு காங்கிரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு கட்சிக்கு தலைவர் என்ற முறையில், ராகுல் தெளிவாக பேச வேண்டும். காங்கிரசை முஸ்லிம் கட்சி எனக்கூறியதன் அர்த்தம் என்ன என்பதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.

    மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக்கலவரம் எனக்கூறி அச்சுறுத்தி வருகிறது. 2019 தேர்தலுக்கு முன் சமுதாய ஒற்றுமைக்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற ஆக்கப்பூர்வமான போட்டியே இருக்க வேண்டும்  என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi
    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #Mansarovar #NirmalaSitharaman
    சென்னை:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை கொண்டுள்ளார் என பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை பாதுகாப்பு துறையும் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  #Mansarovar #NirmalaSitharaman
    முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். #NirmalaSitharaman #VVSLaxman #SaniaMirza
    ஐதராபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்பு கொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.



    இந்நிலையில், ஐதராபாத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா
    மற்றும் முன்னாள் பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிசந்து ஆகியோரை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவர்களிடம் அளித்தார். #NirmalaSitharaman #VVSLaxman #SaniaMirza
    ×