search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crop insurance"

    • குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை.

    பூதலூர்:

    தமிழக காவிரி பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல பாசனப்ப குதிகளில் அவ்வப்போது பெய்த மழையாலும், கால்வாய்களில் தண்ணீர் வரத்து சீராக இருந்ததாலும் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு குறுவைசாகுபடி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    தஞ்சை மாவட்ட த்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் கூடுதலாக சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறுவை சாகுபடி ஊக்குவிப்பதற்காக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்காக குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வேளாண் துறை மூலமாக கூட்டுறவு சங்கத்தி லிருந்து உரங்களை பெற்று செல்கின்றனர்.அதே சமயத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் படவில்லை.

    கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பூச்சி தாக்குதல், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்காலம் தப்பி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழகஅரசு அறிவித்திருந்த நிவார ணமும் முழுமையாக கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள விவசா யிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளி வரவில்லை.

    அண்மையில் தஞ்சையில் காட்டு தோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை குறுவை சாகுபடி பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறிவிட்டு சென்றார்.

    அது குறித்துஅறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாக வில்லை.இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தற்போதுள்ள பருவநிலை மாற்றத்தால் குறுவை சாகுபடியில் பூச்சி தாக்குதல், அறுவடை காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற சூழ்நிலையில் தமிழக அரசே மத்திய அரசுடன் போராடி குறுவை சாகுபடிக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    இன்சூரன்ஸ்திட்டத்தில் கடைசி தேதிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க தமிழக வேளாண் துறையும், தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு குறுவைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பினை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    • இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.
    • ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு எள், பயிறு, உளுந்து சாகுபடி பயிர்களுக்கு நிவராணம் கேட்டும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்நடத்த வட்டாரவிவசாய சங்க தலைவர் ராஜன், விவசாய சங்க செயலாளர் ஒளிச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அதனை தொடர்ந்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர் .

    பின்னர் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், சமூக நல தாசில்தார் ரவி, துணை தாசில்தார் வேதையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது இப்பிரச்சினைகுறித்து நாளை தாலுகா அலு வலகத்தில்வி வசாயிகள், வேளா ண்மைதுறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும் என தாசில்தார் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதிஉதவி வழங்கி பாதுகாக்கவும், 2018-19-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் ரபி பருவத்தில் நெற்பயிர் (சம்பா) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி, நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 520 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்.கடன்பெறாத விவசாயிகள் சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறாக சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் மாதம் 30-ந்தேதி ஆகும். நெல் பயிருக்கான காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.24ஆயிரம் ஆகும்.

    காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.360 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. எனவே, விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி பயன்பெமாறும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது
    பயிர் காப்பீடு இணையதள சேவை முடக்கத்தால் வெண்ணந்தூர் சுற்று வட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மல்லூர்:

    தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் என்பதால் விவசாயிகள் கூட்டம் வங்கிகளிலும் பொது சேவை மையங்களிலும் அலைமோதியது. பயிர் காப்பீடு இணையதள சேவை முடக்கத்தால் வெண்ணந்தூர் சுற்று வட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நடப்புப் பருவத்தில் பயிர் காப்பீடு குறித்து அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் வசூல் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு தேசிய வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் பொது சேவை மையங்களுக்கு மட்டும் வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

    ஆனால் 2016,2017 ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புஇழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் அனைவரும் தற்போது பயிர் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இணையதள சேவை முடக்கத்தால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பிரீமியம் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு மேலும் 10 நாட்களுக்கு கால நீடிப்பு செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இம்மாத இறுதிக்குள் 2016,2017-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பயிர் காப்பீடு கட்டியவர்களுக்கு நிலுவையில் உள்ள தொகை கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    ×