search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student suicide"

    • இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பாலமுருகன் மகள் யாஷினி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி இன்று காலை பயணிகள் ரெயில்மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். தாமரைப்பாடி ரெயில்நிலையம் வந்ததும் ரெயிலை விட்டு இறங்கிய அவர் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகள் கிதோரின் ஸ்மைலா. இவர் நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரி விடுதி அறையில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை விடுதி அறையில் மாணவி கிதோரின் ஸ்மைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த சக மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் சண்டையிடுவதை விரும்பாத பாலகிருஷ்ணன் அவர்களை சமாதானப்படுத்தி வந்தார்.
    • எனினும் தகராறு தினந்தோறும் நீடித்து வந்தது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர், மணிகண்டன் நகர், இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களது மகன் பாலகிருஷ்ணன் (வயது19) கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 15 நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது மனைவி கங்கையம்மாள் கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெற்றோர் சண்டையிடுவதை விரும்பாத பாலகிருஷ்ணன் அவர்களை சமாதானப்படுத்தி வந்தார். எனினும் அவர்களது தகராறு தினந்தோறும் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் பிரபாகரனுக்கும் அவரது மனைவி கங்கையம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை கண்ட பாலகிருஷ்ணன் மிகவும் மனவேதனை அடைந்தார்.

    மேலும் கோபமடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை காட்டி 'இதேப்போல் சண்டை போட்டுக்கொண்டால் கத்தியால் குத்திக்கொண்டு நான் இறந்து விடுவேன்' என்று கூறினார்.

    ஆனாலும் இதனை கண்டு கொள்ளாமல் அவரது பெற்றோர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென ஆவேசம் அடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால் தனது மார்பில் குத்திக் கொண்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

    இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் மகனை கண்டு கதறி துடித்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிய பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தங்களது வீண் சண்டையால் மகன் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து பெற்றோர் கதறி துடித்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கல்லூரி மாணவி தற்கொலை குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (43). டெய்லர். இவரது கணவர் சிவபெருமாள். முறுக்கு வியாபாரி. இவர்களது மகள் பொற்கொடி (20). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்றும், மேலும் அடிக்கடி தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தாய் பொற்கொடியை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பினர்.

    இந்த நிலையில் தேர்வு விடுமுறைக்காக பொற்கொடி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கினார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த பொற்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் பிரேமா மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்லூரிக்கு சென்ற போது ஸ்ரீமதி செல்போனை கொண்டு சென்றார். இதனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர்.
    • ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு உங்கள் மகள் கல்லூரிக்கு செல்போன் எடுத்து வருகிறார்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை அருகே உள்ள பாரதிபுரம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகள் ஸ்ரீமதி (வயது19).

    குரோம்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும்.

    கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீமதியின் பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். வீட்டில் ஸ்ரீமதி மட்டும் இருந்தார்.

    இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற போது ஸ்ரீமதி செல்போனை கொண்டு சென்றார். இதனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர். மேலும் ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு உங்கள் மகள் கல்லூரிக்கு செல்போன் எடுத்து வருகிறார். கல்லூரிக்கு தொலைபேசி எடுத்து வரக்கூடாது என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து ஸ்ரீமதியை தொடர்பு கொண்ட பெற்றோர், கல்லூரிக்கு செல்போனை எடுத்து செல்ல வேண்டாம் என்று கூறி கடுமையாக கண்டித்து பேசி விட்டு இணைப்பை துண்டித்தனர்.

    இதனால் ஸ்ரீமதி மனவேதனை அடைந்தார். இதற்கிடையே சிறிது நேரம் கழித்து ஸ்ரீமதியை பெற்றோர் தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்களிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது மாணவி ஸ்ரீமதி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீமதியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லூரி முடிந்து திரும்பிய மதியரசு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தங்கை லாவண்யா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த லாவண்யாவை கீழே இறக்கினார். பின்னர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவர்களுக்கு மதியரசு (20) என்ற மகனும், லாவண்யா (17) என்ற மகளும் உள்ளனர். செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதியரசு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியிலும், லாவண்யா பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

    லாவண்யா கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தாமதமாக கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு முதலாவது ஆண்டு தேர்வு தொடங்கியதால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியரசு கல்லூரிக்கு சென்று விட்டார். தாய் செல்வி அருகில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லாவண்யா வீட்டில் உள் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கல்லூரி முடிந்து திரும்பிய மதியரசு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தங்கை லாவண்யா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த லாவண்யாவை கீழே இறக்கினார். பின்னர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அவமானம் அடைந்த கோமலேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது பாட்டி பானம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
    • அவரது பாட்டி பானம்மா மற்றும் உறவினர்கள் கோமலேஸ்வரியை மீட்டு ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், ரத்நாலு குண்டா பகுதியை சேர்ந்தவர் கோமலேஸ்வரி (வயது 17). இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் பத்மாவதி அரவணைப்பில் இருந்து வந்தார். கோமலேஸ்வரி ஏலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்டர்மீடியேட் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோமலேஸ்வரி பக்கத்து வீட்டில் உள்ள நாய்க்குட்டியை பார்ப்பதற்காக சென்றார். இரவு நேரத்தில் கோமலேஸ்வரி வீட்டிற்கு வந்ததை கண்ட கணவன், மனைவி எங்கள் வீட்டில் இரவு நேரத்தில் திருடுவதற்கு வந்தாயா என கூறி கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டி தாக்கினர்.

    இதனால் அவமானம் அடைந்த கோமலேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது பாட்டி பானம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    இதனைக் கண்ட அவரது பாட்டி பானம்மா மற்றும் உறவினர்கள் கோமலேஸ்வரியை மீட்டு ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோமலேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏலூர் போலீசில் பத்மாவதி புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி சாவுக்கு காரணமான கணவன், மனைவி இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரால பள்ளியை சேர்ந்த இம்தியாஸ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
    • இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பாக பழகி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம் எர்ர பள்ளியை சேர்ந்தவர் சந்தியா ராணி (வயது 17). இவர் அன்னமய்யா மாவட்டம், முனகலு செருவு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அப்போது ரால பள்ளியை சேர்ந்த இம்தியாஸ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். அப்போது காதலர்கள் இருவரும் தங்களது போட்டோக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இம்தியாஸ் மாணவியின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார்.

    பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

    இந்த நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்த சந்தியா ராணி தன்னுடைய போட்டோக்களை இம்தியாஸ் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு விடுவாரோ என அச்சமடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சந்தியா ராணி தூக்கில் தொங்குவதை கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். அறையில் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது தற்கொலை செய்வதற்கு முன்பாக இம்தியாஸ் மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோவில் பேசி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சந்தியா ராணியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர் சப்-இன்ஸ்பெக்டர் ராம்கோபால் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இம்தியாசை தேடி வருகின்றனர்.

    • தேவதர்ஷினி கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • இன்று அதிகாலை இவர் தனது வீட்டில் சமையல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொந்தாளம் மண் திட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு தேவதர்ஷினி (18) என்ற மகளும், சரவணன் என்ற ஒரு மகனும் உள்ளார்.

    தேவதர்ஷினி கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று அதிகாலை இவர் தனது வீட்டில் சமையல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.

    பின்னர் அருகில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அருகில் தேடிப்பார்த்தனர்.

    அப்போது மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு தோட்டத்து கிணற்றின் கரையில் மாணவி தேவதர்ஷினியின் செருப்பு கிடந்தது. இதையடுத்து கிணற்றை எட்டிபார்த்த போது மாணவி கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கொடுமுடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் மாணவி தேவதர்ஷினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வர்சா ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    பவானி:

    திருச்சி தீரன்நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு வர்சா(22), சுவிக்‌ஷா, அபூர்வா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

    இவர்களது மூத்த மகள் வர்சா ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வர்சா தனது அறையில் யாரும் இல்லாத போது பேனில் சுடிதார் துப்பட்டாவில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் அவரது அறைக்கு வந்த மற்ற மாணவிகள் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை திறக்க நீண்ட நேரம் சத்தம் போட்டும் வர்சா கதவை திறக்கவில்லை.

    இது குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் பார்த்த போது அறையில் வர்சா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைபார்த்த மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மாணவி வர்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தங்களது மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது தொடர்பாக மாணவியின் தாய் சித்ரா சித்தோடு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த எனது மகள் வர்சாவின் காதில் கடந்த 5-ந் தேதி வண்டு புகுந்து விட்டது. இதையடுத்து தனக்கு காது வலி அதிகமாக இருப்பதாக சொன்னார். இதையடுத்து நானும் எனது கணவரும் வந்து வர்சாவை வீட்டிற்கு அழைத்து சென்றோம்.

    பின்னர் காது வலி சரியானதால் கடந்த 12-ந்தேதி மீண்டும் கல்லூரியில் விட்டு சென்றோம். தினமும் போனிலும் பேசிவந்தோம். இந்த நிலையில் நேற்று மதியம் எங்களுக்கு போன் செய்த வர்சா காது வலியினால் தன்னால் இன்று சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இரவு 9 மணியளவில் கல்லூரி முதல்வர் போன் செய்து வர்சா தூக்குப்போட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் வந்து மகளின் உடலை பார்த்தோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார்.
    • உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் விக்னேஷ்காலனியை சேர்ந்தவர் ஆனந்த ராஜன். இவர் அதே பகுதியில் மருந்தகம் மற்றும் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 22). இவர் ரஷ்யாவில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு லோகேஷ் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவரது பிறந்தநாள் வருவதையொட்டி அதனை கொண்டாட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறி்த்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து பெற்றோர் செலுத்தியதாக கூறப்படுகிறது.
    • தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி பாப்பா மன வேதனை அடைந்தார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 53) தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

    இவரது மகள் பாப்பா (18) நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்துள்ளார்.

    இருந்த போதிலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி பாப்பா மன வேதனை அடைந்தார்.

    நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    அப்போது வீட்டு கதவை உள்புறமாக பூட்டி விட்டு பாப்பா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவை குச்சியால் திறந்து உள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மேலும் பாப்பாவின் கைப்பையை சோதனையிட்டபோது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில் அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ×