விருதுநகரில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார்.உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகரில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
Published on

விருதுநகர்:

விருதுநகர் விக்னேஷ்காலனியை சேர்ந்தவர் ஆனந்த ராஜன். இவர் அதே பகுதியில் மருந்தகம் மற்றும் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 22). இவர் ரஷ்யாவில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு லோகேஷ் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவரது பிறந்தநாள் வருவதையொட்டி அதனை கொண்டாட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லோகேஷ் வீட்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறி்த்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com