என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
  X

  பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லூரிக்கு சென்ற போது ஸ்ரீமதி செல்போனை கொண்டு சென்றார். இதனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர்.
  • ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு உங்கள் மகள் கல்லூரிக்கு செல்போன் எடுத்து வருகிறார்.

  தாம்பரம்:

  குரோம்பேட்டை அருகே உள்ள பாரதிபுரம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகள் ஸ்ரீமதி (வயது19).

  குரோம்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும்.

  கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீமதியின் பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். வீட்டில் ஸ்ரீமதி மட்டும் இருந்தார்.

  இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற போது ஸ்ரீமதி செல்போனை கொண்டு சென்றார். இதனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர். மேலும் ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு உங்கள் மகள் கல்லூரிக்கு செல்போன் எடுத்து வருகிறார். கல்லூரிக்கு தொலைபேசி எடுத்து வரக்கூடாது என்று தெரிவித்தனர்.

  இதையடுத்து ஸ்ரீமதியை தொடர்பு கொண்ட பெற்றோர், கல்லூரிக்கு செல்போனை எடுத்து செல்ல வேண்டாம் என்று கூறி கடுமையாக கண்டித்து பேசி விட்டு இணைப்பை துண்டித்தனர்.

  இதனால் ஸ்ரீமதி மனவேதனை அடைந்தார். இதற்கிடையே சிறிது நேரம் கழித்து ஸ்ரீமதியை பெற்றோர் தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்களிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது மாணவி ஸ்ரீமதி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ஸ்ரீமதியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×