search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Senthilraj"

    • பசுவந்தனையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதியோர்- விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் செய்ய பெறப்பட்டவர்கள் 192 மனுக்களின் 172 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதியோர்- விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் செய்ய பெறப்பட்டவர்கள் 192 மனுக்களின் 172 மனுக்கள் ஏற்கப்பட்டன 72 பேருக்கு 2.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பசுவந்தனை பஜாரில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

    • மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நட திட்டமிடப்பட்டது.
    • கலெக்டர் செந்தில்ராஜ் பனை விதைகள் மற்றும் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நட திட்டமிடப்பட்டது.

    இதன்படி காயல்பட்டினம் கடலோரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பனைமர விதைகள் மற்றும் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,

    நெல்லை மாவட்டத்தி லிருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம் தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் 36 ஆயிரம் மர விதைகள் விதைக்கப்படுகின்றன. மேலும் இந்த மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த ஐந்து ஆண்டுகளாக மதர் சமூக சேவை அமைப்பு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

    இதன்படி இதுவரை 70 லட்சத்து 15 ஆயிரத்து 439 பனைமர விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.இந்த செயல் பாராட்டுக்குரியது. தொலைநோக்கில் பயன் தரக்கூடிய பனை மரங்களை வளர்க்கும் திட்டம்

    எல்லோரும் இணைந்து மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் பேசுகையில், தமிழகத்தில் 33 சதவீத மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே உள்ளன.அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் 4 சதவீத மரங்கள்தான் இருக்கின்றன. ஆகவே அனைத்து பொதுமக்களும் மரம் நடும் பணியில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.முன்னதாக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் கென்னடி வரவேற்று பேசினார்.

    மாநில துணைத் தலைவர் சுதாகர், மாநில செயலாளர் டேனியல் மோசஸ், மாவட்ட தலைவர் ராஜ்குமார், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், வாவு கல்லூரி மாணவிகள், காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டியன்பட்டினம் மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளது
    • கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

    அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    ×