search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inspects"

    • தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், ரேசன் கடையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டி மற்றும் தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ரேசன் கடைகளில் இம்மாதத்திற்கான பொருட்கள் முதல் தவணை வரப்பெற்ற விபரம் மற்றும் விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தகவல் பலகையில் பொருட்களின் இருப்புகளை முறையாக தினந்தோறும் பதிவு செய்திடவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப் பொருட்களை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் வழங்கிட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, அருகில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு கலெக்டர் நேரடியாக சென்று இம்மாதம் வழங்கப்பட்ட அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், ரேசன் கடையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    • உணவுப்பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
    • பணியினை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி அருகே கோட்டூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.26.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உணவுப்பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்த தாவது:-

    தேனி அருகே கோட்டூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அலுவலகம் மற்றும் உணவகம், உட்புற சாலை கள், வடிகால், வாகன நிறுத்துமிடம், கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி, எடை மேடை, கட்டுப்பாட்டு அறை, சுற்றுப்புறச்சுவர், 5000 மெ.டன் குளிர்பதன க்கிட்டங்கி, 2500 மெ.டன் கிட்டங்கி, 80 மெ.டன் வாழை பழுக்க வைக்கும் கூடம் மற்றும் பவர் ஹவுஸ் கூடிய வசதிகளுடன் ரூ.26.30 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொகுப்பிற்கான கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இத்தொகுப்பில், காய்கறி கள் மற்றும் பழங்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாத்து, நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்தல். குளிர்பதன கிட்டங்கிகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை இருப்பு வைத்து பாதுகாத்து பயனடைதல். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை மதிப்பு கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்தல். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய ங்களை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்தல்.

    இத்தொகுப்பு பயன்பா ட்டிற்கு வரும் போது, உள்ளுர் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நுகர்வோர்களுக்கு நேரடி யாக விற்பனை செய்வா ர்கள். எனவே தேனி மாவட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயி கள், 20,000 நுகர்வோர்கள், வியாபாரிகள் இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் பயனடை வார்கள்.

    உணவுப்பதப்படு த்தும் தொகுப்பு கட்டுமானப் பணியினை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
    • சமதர்மபுரம் ரேசன் கடை மற்றும் ஊஞ்சாம்பட்டி மகளிர் ரேசன் கடை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    தேனி:

    தேனி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    ஊஞ்சாம்பட்டி ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2021-22 கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்பணை அமைத்தல் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2021-22 கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டுமானப்பணி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) 2021-22, கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2019-20 கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் அம்மாபுரம் அங்கன்வாடி தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2021-22 கீழ் ரூ.7.70 லட்சம் மதிப்பீட்டில் முத்தைய கோவில் தெரு ஓடையில் பாலம் அமைத்தல் பணி,

    கிராமப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2021-22 கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் கருவேல்நாயக்கன்பட்டி சாலை முதல் பின்னத்தேவன்பட்டி சாலை வரை தார்சாலை அமைக்கப்பட்ட பணி ஆகிய பணிகளையும் ஆய்வு செய்து விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமதர்மபுரம் ரேசன் கடை மற்றும் ஊஞ்சாம்பட்டி மகளிர் ரேசன் கடை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    • அரசு ஆஸ்பத்திரியில மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
    • ரேசன் கடையில் அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி:

    கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்தகத்தில் வழங்கப்படும் மருந்து,

    மாத்திரைகளின் இருப்பு, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, ரேசன்கடையில் விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • திருமலாபுரம், மரிக்குண்டு மற்றும் தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமலாபுரம், மரிக்குண்டு மற்றும் தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    திருமலாபுரம் ஊராட்சியில் 15-வது மானிய நிதியின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா நகர் முதல் குறுக்குத்தெரு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் க.விலக்கு பகுதியில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,

    ரூ.6.91 லட்சம் மதிப்பீட்டில் க.விலக்கு பகுதியில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மரிக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரத்து வாய்க்கால் மேம்பாட்டுப்பணி, ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி,

    தேக்கம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் ஊரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப்பணி, ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.6.27 லட்சம் மதிப்பீட்டில் முத்துரெங்கபுரம் ஆதிதிராவிடர் மயானத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி,

    பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப்பணி ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் செயல்பாடு குறித்து வண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
    • மேலும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.

    தேனி:

    முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள தேனி மாவட்டத்தின் கடைகோடி பகுதியான கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட வண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, சீலமுத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணலாத்துக்குடிசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வருசநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, சமையல் கூடம், தேவையான சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் பட்டியல், தண்ணீர் வசதி, மின் வசதி உள்ளிட்டைவகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது,

    முதல்-அமைச்சர் அரசுப்பள்ளிகளில் பயிலுகின்ற ஏழை மாணவ, மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு ஆரம்பப்பள்ளிகளில் பயிலுகின்ற 1,342 மாணவர்களுக்கும், 1,291 மாணவிகளுக்கும் என மொத்தம் 2,633 மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆரம்பப் பள்ளிக்கும் உணவு தயாரித்தலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, சமையல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அட்டவணையின்படி, திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.

    • தனி நபர் கழிப்பறை கட்டும் பணி கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கழிப்பறை கட்டுமானப்பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன். இவரது மகள் மணிமேகலை. தன்னுடைய சிறுவயதில் எதிர்பாராத விதமாக கண் பார்வையை இழந்து விட்டார். உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும் கண் பார்வை திரும்ப பெற முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்.

    தனது வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் அவருடைய குடியிருப்பு பகுதி அருகில் வசிக்கும் பெண்களின் துணையுடன் பொது கழிப்பறைக்கு சென்று வருகிறார்.

    இதனால் மாற்றுத்திறனாளி பெண் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் என்ற தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் முரளிதரன் அப்பெண்ணின் நிலையினை கருத்தில் கொண்டு, அவரது வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில், தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,000/- மதிப்பீட்டில் மணிமேகலை வீட்டில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமானப்பணியினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, கழிப்பறை கட்டுமானப்பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய த்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
    • பதிவு செய்யாத விடுதி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டணையும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    தேனி:

    தேனி மாவட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய த்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொ ண்டதுடன், அங்கன்வாடி மையத்தினை சுத்தமாகவும், சுகாதார மாகவும் பரா மரித்திடவும், குழந்தை களுக்கு வழங்க ப்படும் மதிய உணவினை அட்ட வணைப்படி முறையாக வழங்கிடவும் அங்கன்வாடி பணியாளர்களை அறிவுறு த்தினார்.

    அதனைத்தொடர்ந்து, கண்டமனூர், புதுராம சந்திராபுரம், வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் செய ல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, கண்டமனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய த்தில் மருத்துவர்கள், அலு வலர்கள் மற்றும் பணியாள ர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


    தமிழ்நாடு பெண்கள் மற்றும் சிறார் தங்கும் விடுதிகள் உரிமம் பெற மாவட்ட சமூக நல அலுவல கத்திலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் செயல்படும் விதிகள் உரிமம் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலும் தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்யாத விடுதி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டணையும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப பள்ளி, மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
    • மாணவர் விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள், மதிய உணவின் தரம் குறித்து கலெக்டர் முரளிதரன்ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மற்றும் சுற்றுப்புற சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை முறையாக தினந்தோறும் கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து மேலச்சொக்கநாதபுரம் பேரூரட்சிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதியில் பணியாளர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, உணவுகளின் வகைகள், தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    மேலும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவிடும் கருவி, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் அதன் தரம் ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ரேசன்கடையில் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார்.

    • தேனி மாவட்டத்தில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் அருகே வெட்டுக்காடு, கப்பாமடை, தாமரைக் குளம், ஒட்டன் குளம், பாரவந்தான், பி.டி.ஆர் வட்டம், ஒழுகுவழி சாலை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்தப் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கடந்த சில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடங்களில் கொள்முதல் நிலையம் அமைத்து அங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.இந்த இடங்கள் விவசாய பணிகளுக்கு போதுமானதாக இல்லை.மேலும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் விற்பனை செய்த நெல் மூட்டைகளை தார்ப்பாய்கள் மூலம் மூடி வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. எனவே கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, முல்லைச் சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், துணை தலைவர் ராஜா, பொருளாளர் ஜெயபால் மற்றும் விவசாயிகள் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

    இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வாளர் மாளிகை வளாகம் பகுதியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.கவுசல்யா உணவுப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், தாசில்தார் அர்ஜூனன், பெரியார் அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட மக்கள் வீடு கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரேசன்கடையில் விற்பனை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை தரமானதாக வழங்க அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பட்டி மற்றும் திம்மரசநாயக்கனூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    குடியிருப்பு கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, பிச்சம்பட்டி ஊராட்சிப் பகுதிதியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாயக்கூடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ரேசன்கடை புனரமைக்கும் பணிகள், ரெங்கசமுத்திரம் ஊராட்சிப்பகுதியில் ஆதிதிராவிடர் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் பணி, ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் முருங்கை நாற்றாங்கால் அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.18.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிச் சுவர் கட்டுமானப்பணி, கோவில்பட்டி ஊராட்சிப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டடு வரும் வரத்துவாய்க்கால் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

    திம்மரசநாயக்கனூர் ஊராட்சிப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, டி.சுப்புலாபுரம் ஊராட்சிப்பகுதியில் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.11.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி, இராஜகோபாலன் ஊராட்சிப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.32 ஆயிரம் மதிப்பீட்டில் செயலற்ற ஆழ்துளை கிணறு அருகில் நீர் செறிவூட்டு குழி அமைக்கப்பட்டுள்ள பணி ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ரேசன்கடையில் விற்பனை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை தரமானதாக வழங்க அறிவுறுத்தினார்.

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம், சருத்தப்பட்டி, கீழவடகரை மற்றும் எண்டப்புளி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    லட்சுமிபுரம் ஊராட்சிப்பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் சீரமைப்பு பணி, ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சுகுழி மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி, ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் சுற்று வேலி அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்காலில் 50,000 முருங்கை கன்றுகள் நடவு செய்யும் பணி, ரூ.2.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, ரூ.3.72 லட்சம் மதிப்பீட்டில் பட்டாளம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, ரூ.5லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் அமைக்கும் பணி.

    சருத்துப்பட்டி ஊராட்சிப்பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி, 14-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஜல்லிபட்டி சாலை முதல் சருத்துப்பட்டி வரை வடிகால் மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி.

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடை கட்டுமானப்பணி, கீழ ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.19.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப்பணி, எண்டப்புளி ஊராட்சிப்பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ×