search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    மரிக்குண்டு பகுதியில் வரத்து வாய்க்கால் மேம்பாட்டு பணியினை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆண்டிபட்டி பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • திருமலாபுரம், மரிக்குண்டு மற்றும் தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமலாபுரம், மரிக்குண்டு மற்றும் தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    திருமலாபுரம் ஊராட்சியில் 15-வது மானிய நிதியின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா நகர் முதல் குறுக்குத்தெரு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் க.விலக்கு பகுதியில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,

    ரூ.6.91 லட்சம் மதிப்பீட்டில் க.விலக்கு பகுதியில் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மரிக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரத்து வாய்க்கால் மேம்பாட்டுப்பணி, ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி,

    தேக்கம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் ஊரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப்பணி, ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.6.27 லட்சம் மதிப்பீட்டில் முத்துரெங்கபுரம் ஆதிதிராவிடர் மயானத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி,

    பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப்பணி ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×