search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு தனி நபர் கழிப்பறை கட்டும் பணி கலெக்டர் ஆய்வு
    X

    மாற்றுத்திறனாளி வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு தனி நபர் கழிப்பறை கட்டும் பணி கலெக்டர் ஆய்வு

    • தனி நபர் கழிப்பறை கட்டும் பணி கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கழிப்பறை கட்டுமானப்பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன். இவரது மகள் மணிமேகலை. தன்னுடைய சிறுவயதில் எதிர்பாராத விதமாக கண் பார்வையை இழந்து விட்டார். உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும் கண் பார்வை திரும்ப பெற முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்.

    தனது வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் அவருடைய குடியிருப்பு பகுதி அருகில் வசிக்கும் பெண்களின் துணையுடன் பொது கழிப்பறைக்கு சென்று வருகிறார்.

    இதனால் மாற்றுத்திறனாளி பெண் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் என்ற தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் முரளிதரன் அப்பெண்ணின் நிலையினை கருத்தில் கொண்டு, அவரது வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில், தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,000/- மதிப்பீட்டில் மணிமேகலை வீட்டில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமானப்பணியினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, கழிப்பறை கட்டுமானப்பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×