search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே ரூ.26.30 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு கலெக்டர் ஆய்வு
    X

    கோட்டூரில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமானப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி அருகே ரூ.26.30 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு கலெக்டர் ஆய்வு

    • உணவுப்பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
    • பணியினை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி அருகே கோட்டூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.26.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உணவுப்பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்த தாவது:-

    தேனி அருகே கோட்டூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அலுவலகம் மற்றும் உணவகம், உட்புற சாலை கள், வடிகால், வாகன நிறுத்துமிடம், கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி, எடை மேடை, கட்டுப்பாட்டு அறை, சுற்றுப்புறச்சுவர், 5000 மெ.டன் குளிர்பதன க்கிட்டங்கி, 2500 மெ.டன் கிட்டங்கி, 80 மெ.டன் வாழை பழுக்க வைக்கும் கூடம் மற்றும் பவர் ஹவுஸ் கூடிய வசதிகளுடன் ரூ.26.30 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொகுப்பிற்கான கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இத்தொகுப்பில், காய்கறி கள் மற்றும் பழங்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாத்து, நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்தல். குளிர்பதன கிட்டங்கிகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை இருப்பு வைத்து பாதுகாத்து பயனடைதல். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை மதிப்பு கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்தல். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய ங்களை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்தல்.

    இத்தொகுப்பு பயன்பா ட்டிற்கு வரும் போது, உள்ளுர் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நுகர்வோர்களுக்கு நேரடி யாக விற்பனை செய்வா ர்கள். எனவே தேனி மாவட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயி கள், 20,000 நுகர்வோர்கள், வியாபாரிகள் இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் பயனடை வார்கள்.

    உணவுப்பதப்படு த்தும் தொகுப்பு கட்டுமானப் பணியினை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×