search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm palanisamy"

    மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று மதியம் நேரில் அஞ்சலி செலுத்தவிருக்கின்றனர். #ADMK #MLA #AKBose
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகரில் வசித்து வந்த இவருக்கு நேற்று நள்ளிரவு தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. 

    இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மறைந்த போஸின் உடலுக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகரில் இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. அதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிற்பகல் 1 மணியளவில் போஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவிருக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும், போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கின்றனர்.



    திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்க்கது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே அவர் உடல்நலக்குறைவால் காலமானார். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கிய ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MLA #AKBose

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy #Tamilfilms
    சென்னை:

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 2007 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களில் மானியம் பெறுவதற்கு தகுதியான தமிழ்த் திரைப்படங்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி, டி.வி. மாசிலாமணி தலைமையிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இத்தேர்வுக் குழுவினர், 2007-ம் ஆண்டுக்கு 14 திரைப்படங்களுக்கும், 2008-ம் ஆண்டுக்கு 18 திரைப்படங்களுக்கும், 2009-ம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2010-ம் ஆண்டுக்கு 21 திரைப்படங்களுக்கும், 2011-ம் ஆண்டுக்கு 17 திரைப்படங்களுக்கும், 2012-ம் ஆண்டுக்கு 22 திரைப்படங்களுக்கும், 2013-ம் ஆண்டுக்கு 12 திரைப்படங்களுக்கும் மற்றும் 2014-ம் ஆண்டுக்கு 23 திரைப்படங்களுக்கும் என மொத்தம் 8 ஆண்டுகளுக்கு 149 திரைப்படங்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.

    தேர்வு செய்யப்பட்ட 149 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 10 கோடியே 43 லட்சம் ரூபாய் மானியத்தொகைக்கான காசோலைகளை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், 10 தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியமாக தலா 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy #Tamilfilms
    பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy
    சென்னை:

    பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டம் கொமாரபாளையத்தைச் சேர்ந்த முகம்மது ஷெரிப் மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போதும்; காஞ்சீபுரம் மாவட்டம் தேன்பாக்கத்தைச் சேர்ந்த தண்டபானி, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும் உயிர் இழந்தனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மணப்பாக்கத்தைச் சேர்ந்த வடிவேல் பணி செய்யும்போதும்; புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை நல்லூரைச் சேர்ந்த பெரியசாமி மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதும் உயிர் இழந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை காளிசெட்டிபட்டி புதூரைச் சேர்ந்த சரோஜா அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததாலும்; அரியலூர் மாவட்டம் மேலக்காவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தராசுவின் மனைவி சத்தியப்பிரியா, வயலில் இருந்து புல்கட்டு தூக்கி வரும்போது மின்கம்பி உரசியதாலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் கொரநாட்டுக்கருப்பூரைச் சேர்ந்த ஆனந்குமாரின் மகன் தமிழழகன், நீர்தொட்டியின் மின்சார பொத்தானை தொட்டபோதும்; காஞ்சிபுரம் மாவட்டம் மேலையூரைச் சேர்ந்த அர்ச்சுனனின் மகன் சுப்பிரமணி, விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததாலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் ‘பி’ கிராமத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் மின்சார கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். விழுப்புரம் மாவட்டம் பொற்படாக்குறிச்சியைச் சேர்ந்த வீரமணியின் மகள் தர்ஷினி மின்சாரம் தாக்கியதால் மரணமடைந்தார்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் பொன்னுசாமி, வயலில் உள்ள மின் மோட்டார் கம்பியை தொட்டபோதும்; ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் உள்வட்டம், பூமாவிலங்கைச் சேர்ந்த முருகேசனின் மகன் கணேசன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் உட்கடை நாகப்பன்பட்டியைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகன் வினோத்குமார் வேப்ப மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழைகள் பறித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பியை தொட்டபோதும்;

    திருநெல்வேலி மாவட்டம் கொடிக்குறிச்சியைச் சேர்ந்த பரமசிவத்தேவரின் மகன் புதியவன், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததாலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டையைச் சேர்ந்த எல்லப்பனின் மகன் பசுபதி, ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணற்றை சரிசெய்யும் பணியின் போதும்; கிருஷ்ணகிரி மாவட்டம் மாவத்தூர் கூட்டுரோட்டைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ராஜேந்திரன் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோதும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    கடலூர் மாவட்டம் அரங்கமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகன் பிரஷாந்த், வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டும்; திருப்பூர் மாவட்டம் ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் பிரபு மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும், மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    இவர்கள் உயிர் இழந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிர் இழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இச்சம்பவங்களில் உயிர் இழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy #Tamilnews

    நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். #pmmodi #cmpalanisamy #Scholarship
    சென்னை:

    எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்கும் விதிகள் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அதிக அளவு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பயில்வதால் உதவித்தொகை வழங்குவதை நிறுத்தக்கூடாது. கல்வி உதவித்தொகை வழங்கும் விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்.

    நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    என முதல்வர் குறிப்பிட்டிருந்தார். மேலும், பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார். #pmmodi #cmpalanisamy #Scholarship

    ×