search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citroen"

    • பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் முற்றிலும் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது.
    • இந்த கான்செப்ட் சிட்ரோயன் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதை குறிக்கும் வகையில் உள்ளது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்-இ எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆல்-இ கான்செப்ட் போக்குவரத்தை குறைந்த விலையில், அதிக மகிழ்ச்சியான ஒன்றாக, மதிப்பு மிக்கதாக, பயனுள்ளதாக மாற்றும் இலக்கை கொண்டிருக்கிறது.

    ஆல்-இ கான்செப்ட் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடல் செயல்திறன், சீரான இயக்கம் மற்றும் அதிக தரமுள்ளதாக உருவாக்கப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் குறைந்த விலை, எடை கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய சிட்ரோயன் திட்டம் வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் இந்த கான்செப்ட் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    சிட்ரோயன் ஆல்-இ கான்செப்ட் பிளாட் பொனெட், ரூப், மற்றும் பிக்-அப் பெட் பேனல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டீல்/அலுமினியம் ஹைப்ரிட் வீல்கள் குட்-இயர் ஈகிள் கோ கான்செப்ட் டயர்களை கொண்டுள்ளன. இந்த காரில் 40 கிலோவாட் ஹவர் பேட்டரியை கொண்டு 400 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முியும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    மேலும் காரை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 23 நிமிடங்களே ஆகும். ஆல்-இ காரை மிக எளிதில் மறுசுழற்சி செய்திட முடியும். ஒருவேளை மறுசுழற்ச்சி செய்ய முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் இதன் பாகங்களை மற்ற மாடல்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியிடுவதை ஏற்கனவே அறிவித்து விட்டது.
    • புதிய சிட்ரோன் C3 EV மாடலுக்கான டெஸ்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C3 ஹேச்பேக் காரின் எலெக்ட்ரிக் வேரியண்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் திட்டத்தை சிட்ரோயன் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், சிட்ரோயன் C3 EV மாடல் சோதனை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி சிட்ரோயன் C3 EV மாடலின் முன்புறம் வலது புற பெண்டர் பகுதி மட்டும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் வலதுபுற பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் காரில் ஆல்-பிளாக் பம்ப்பர், ட்வின் ஸ்லாட் கிரில் பகுதியில் வைட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய சிட்ரோயன் C3 EV மாடலின் பவர்டிரெயின் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த காரில் 50 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். இந்த கார் பற்றிய இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: TeamBHP

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • இந்தியாவில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    பிரெஞ்சு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் சில மாதங்களுக்கு முன் C3 ஹேச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சிட்ரோயன் C3 அறிமுகம் செய்யும் முன்பே C3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என சிட்ரோயன் அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்வதற்கு மாற்றாக கார் உற்பத்தியாளர்கள் சிறிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சிட்ரோயன் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சிறிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இது தவிர டாடா மோட்டார்ஸ் விரைவில் தனது டியாகோ எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் வுலிங் ஏர் எலெக்ட்ரிக் காரை தழுவி சிறிய காரை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடலின் பெண்டர் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படுகிறது. தற்போதைய ஸ்பை படத்தில் காரின் முழுமையாக தெரியவில்லை. மஹிந்திரா XUV400 போன்றே இந்த காரிலும் முன்புற பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்திய சூழலுக்கு முழுமையாக ஏற்ற வகையில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் காரில் முன்புற கிரில் மூடப்பட்டு, மற்ற பாகங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்தியாவில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விலை அதன் பெட்ரோல் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.

    தற்போது சிட்ரோன் C3 பெட்ரோல் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Photo Courtesy: Team BHP

    • சிட்ரோயன் நிறுவனம் தனது C3 ஏர்கிராஸ் காரின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய சிட்ரோயன் கார் C3 பிளஸ் எனும் பெயரில் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் குறைந்த விலையில் C3 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்தியாவில் இது சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடல் ஆகும். ஐந்து பேர் பயணிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் தனது C3 ஏர்கிராஸ் மாடலை ஏழு பேர் பயணிக்கும் வகையிலும் அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு பேர் பயணிக்கும் வகையில் இருக்கை அமைப்பு கொண்ட சிட்ரோயன் C3 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. எனினும், இது பற்றி சிட்ரோயன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.


    மூன்று அடுக்கு முறையில் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் உண்மையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு சோதனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களும் ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டுவதில்லை என்ற அடிப்படையில், இது உண்மையில் விற்பனைக்கு வருமா என்பது தற்போதைக்கு சந்தேகம் தான்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய C3 மாடலை கொண்டு டாடா பன்ச், மாருதி சுசுகி இக்னிஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ள முடிவு செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கும் நிலையில், சிட்ரோயன் C3 விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முன்னதாக இதே காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியாகி இருந்தன.

    Photo Courtesy: Cartoq / The Car Show

    • இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்த எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் C3 மாடலை தழுவி எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவு கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில் சிட்ரோயன் C3 EV மாடல் புதிதாக இணைய இருக்கிறது. மேலும் சிட்ரோயன் C3 EV மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் தான் சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் எஸ்யுவி சார்ந்த பி பிரிவு ஹேச்பேக் மாடலாக அறிமுகமானது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் பெரிய ஹேச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது.


    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா டியாகோ எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்த மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சர்வதேச எலெக்ட்ரிக் வாகன தினத்தில் அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் சிட்ரோயன் C3 மாடலும் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படுவது இந்திய சந்தையில் இரண்டாவது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலாக இருக்கும்.

    செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹேச்பேக் கார்கள் அளவில் சிறியதாக இருப்பதால் இவற்றில் வழங்கப்படும் பேட்டரி அளவும் சிறியதாகவே இருக்கும். இதனால் இரு கார்களின் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக இந்த எலெக்ட்ரிக் கார்களின் விலையும் ஓரளவு குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • புது காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் இந்திய சந்தையில் ஒருவழியாக C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்து விட்டது. புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 67 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இந்த மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படவில்லை. மாறாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலின் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.


    இந்த மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்-களுக்கு மாற்றாக தற்போது ஒற்றை எல்இடி ஹெட்லைட், ட்வின் எல்இடி டிஆர்எல்கள் காரின் முன்புற கிரில் பகுதியில் இணையும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதன் பம்ப்பரில் செங்குத்தான ஏர் இண்டேக்குகள் உள்ளன.

    பக்கவாட்டு பகுதியில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் 18 இன்ச் அலாய் வீல்கள், கிளாஸ் பிளாக் மிரர் கேப்கள், மேட் பிளாக் ரூஃப் ரெயில் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்மபட்ட எல்இடி டெயில் லைட்கள், 3டி கிராபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் 10 இன்ச் ஃபிரீ ஸ்டாண்டிங் இன்போடெயின்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 176.8 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஹூண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ் மற்றும் போக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் புதிய C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • இந்த மாடலில் டச் ஸ்கிரீன் கொண்ட கேபின் மற்றும் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட உள்ளது. பேஸ்லிப்ட் செய்யப்பட்ட சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி தோற்றத்தில் இந்த கார் அதன் சர்வதேச வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரின் முகப்பு பகுதியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புற பம்ப்பரில் அகலமான ஏர் டேம், மெல்லிய ட்வின் ஸ்லாட் கிரில், புதிய எல்இடி ஹெட்லைட் யூனிட், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன.


    பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிக மாற்றம் செய்யப்படவில்லை. டெயில் லைட் மற்றும் புதிய 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் புதிதாக எக்லிப்ஸ் புளூ நிறத்தில் கிடைக்கும். டீசரில் புது காரின் கேபின் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்களும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த மாடல் தனித்து நிற்கும் டச் ஸ்கிரீன் யூனிட், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோலுக்கு தனி கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

    ஐரோப்பிய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் பிளக்-இன்-ஹைப்ரிட் வெர்ஷனில் கிடைக்கிறது. எனினும், இந்த அம்சம் இந்தியாவிலும் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் C5 ஏர்கிராஸ் மாடல் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 177 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இந்த காரின் CNG வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது C3 ஹேச்பேக் மாடலின் புது வேரியண்டை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. விரைவில் சிட்ரோயன் C3 காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சிட்ரோயன் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும்.


    Photo Courtesy: GaadiWaadi 

    CNG கிட் பொருத்தப்படும் பட்சத்தில் இந்த காரில் குறைந்த அளவு பூட் ஸ்பேஸ் மற்றும் செயல்திறன் அளவுகள் குறைந்து இருக்கும். புதிய சிட்ரோயன் C3 CNG வேரியண்டிலும் 1.2 லிட்டர், NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 80.8 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG-ஐ பயன்படுத்தும் போது செயல்திறன் மற்றும் டார்க் அளவுகள் கணிசமாக குறைந்து விடும். இந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுவதை பார்க்கும் போது பிரென்ச் நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரத்தை நீட்டிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதை அறிய முடிகிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் தனது குறைந்த விலை காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • சிட்ரோயன் நிறுவனம் மற்றொரு புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்டெலாண்டிஸ் நிர்வகிக்கும் சிட்ரோயன் பிராண்டு சமீபத்தில் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 மாடல் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சிட்ரோயன் நிறுவனம் மீண்டும் சந்தையில் கலக்கத்தை ஏற்படுத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் C3 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.


    சிட்ரோயன் C3 காரை தழுவி உருவாகும் எலெக்ட்ரிக் கார் டிசம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விற்பனை ஏப்ரல் 2023 வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டு இருக்கும். இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் மாட்யுலர் CMP பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த கார் வழக்கமான ICE மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பாகங்கள் உள்நாட்டில் இருந்தே பயன்படுத்த இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் காரில் குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேடெட் கிளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    விலையை பொருத்தவரை இந்திய சந்தையில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 13 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த கார் டாடா டிகோர் EV மற்றும் எம்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய எலெக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக அமையும்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் ஹேச்பேக் மாடல் C3 இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காரின் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 ஹேச்பேக் மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 மாடல் விலை கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சிட்ரோயன் C3 மாடல் லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்கள் மற்றும் பத்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஆறு டூயல் டோன் மற்றும் நான்கு மோனோ டோன் நிறங்கள் அடங்கும். சிட்ரோயன் C3 மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


    சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட்கள், ஃபாக் லைட்கள், காண்டிராஸ்ட் கலர் ஸ்கிட் பிளேட்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், வீல் கவர், 10 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ஹைட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 கார் கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஹேச்பேக் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
    • இதில் டூயல் ஸ்லாட் குரோம் கிரில் உள்ளது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட C3 ஹேச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 விலை இந்தியாவில் ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பத்து வித நிறங்கள், இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    வெளிப்புறத்தில் புதிய சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், சிக்னேச்சர் டூயல் ஸ்லாட் குரோம் கிரில், ஃபாக் லைட்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் பம்பரில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது.


    காரின் உள்புறம் 2022 சிட்ரோயன் C3 மாடல் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் சீட், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, நான்கு ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், டில்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்டீரிங் வழங்கப்பட்டு உள்ளது.

    என்ஜினை பொருத்தவரை சிட்ரோயன் C3 மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 109 ஹெச்.பி. பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 81 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 லைவ்: ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் ரூ. 6 லட்சத்து 62 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் வைப் பேக் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் டூயல் டோன் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 6 லட்சத்து 93 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 06 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 கார் கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய C3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல் ஆகும்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. மாடல் விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த மாடலின் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அம்சங்கள் அடிப்படையில் இந்த மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான விலை விவரங்கள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. புதிய சிட்ரோயன் C3 மூலம் அதிக போட்டி நிறைந்த பிரிவில் களமிறங்குவதோடு, ஹேச்பேக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களையும் குறி வைக்க சிட்ரோயன் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.


    தற்போது சப்-4 மீட்டல் எஸ்.யு.வி. பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களும் இந்த பிரிவில் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.

    இந்த மாடல்கள் மட்டுமின்றி கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கும் புதிய சிட்ரோயன் C3 போட்டியாக அமைகிறது.

    ×