search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    சோதனையில் சிக்கிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் 7 சீட்டர் வேரியண்ட்
    X

    சோதனையில் சிக்கிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் 7 சீட்டர் வேரியண்ட்

    • சிட்ரோயன் நிறுவனம் தனது C3 ஏர்கிராஸ் காரின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய சிட்ரோயன் கார் C3 பிளஸ் எனும் பெயரில் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் குறைந்த விலையில் C3 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்தியாவில் இது சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடல் ஆகும். ஐந்து பேர் பயணிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் தனது C3 ஏர்கிராஸ் மாடலை ஏழு பேர் பயணிக்கும் வகையிலும் அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு பேர் பயணிக்கும் வகையில் இருக்கை அமைப்பு கொண்ட சிட்ரோயன் C3 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. எனினும், இது பற்றி சிட்ரோயன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.


    மூன்று அடுக்கு முறையில் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் உண்மையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு சோதனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களும் ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டுவதில்லை என்ற அடிப்படையில், இது உண்மையில் விற்பனைக்கு வருமா என்பது தற்போதைக்கு சந்தேகம் தான்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய C3 மாடலை கொண்டு டாடா பன்ச், மாருதி சுசுகி இக்னிஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ள முடிவு செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கும் நிலையில், சிட்ரோயன் C3 விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முன்னதாக இதே காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியாகி இருந்தன.

    Photo Courtesy: Cartoq / The Car Show

    Next Story
    ×