search icon
என் மலர்tooltip icon

    கார்

    சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட்
    X

    சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட்

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • புது காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் இந்திய சந்தையில் ஒருவழியாக C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்து விட்டது. புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 67 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இந்த மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படவில்லை. மாறாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலின் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.


    இந்த மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்-களுக்கு மாற்றாக தற்போது ஒற்றை எல்இடி ஹெட்லைட், ட்வின் எல்இடி டிஆர்எல்கள் காரின் முன்புற கிரில் பகுதியில் இணையும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதன் பம்ப்பரில் செங்குத்தான ஏர் இண்டேக்குகள் உள்ளன.

    பக்கவாட்டு பகுதியில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் 18 இன்ச் அலாய் வீல்கள், கிளாஸ் பிளாக் மிரர் கேப்கள், மேட் பிளாக் ரூஃப் ரெயில் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்மபட்ட எல்இடி டெயில் லைட்கள், 3டி கிராபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் 10 இன்ச் ஃபிரீ ஸ்டாண்டிங் இன்போடெயின்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 176.8 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஹூண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ் மற்றும் போக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×