search icon
என் மலர்tooltip icon

    கார்

    சிட்ரோயன் C3 EV எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    சிட்ரோயன் C3 EV எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

    • இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்த எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் C3 மாடலை தழுவி எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவு கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில் சிட்ரோயன் C3 EV மாடல் புதிதாக இணைய இருக்கிறது. மேலும் சிட்ரோயன் C3 EV மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் தான் சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் எஸ்யுவி சார்ந்த பி பிரிவு ஹேச்பேக் மாடலாக அறிமுகமானது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் பெரிய ஹேச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது.


    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா டியாகோ எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்த மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சர்வதேச எலெக்ட்ரிக் வாகன தினத்தில் அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் சிட்ரோயன் C3 மாடலும் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படுவது இந்திய சந்தையில் இரண்டாவது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலாக இருக்கும்.

    செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹேச்பேக் கார்கள் அளவில் சிறியதாக இருப்பதால் இவற்றில் வழங்கப்படும் பேட்டரி அளவும் சிறியதாகவே இருக்கும். இதனால் இரு கார்களின் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக இந்த எலெக்ட்ரிக் கார்களின் விலையும் ஓரளவு குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×