search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike theft"

    • கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினார்
    • ெஜயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவர், நேற்று முன்தினம் மண்டலவாடி ஊராட்சிக்கு உட் பட்டவெள்ளைய கவுண்டனூர் பகுதியில் நடந்த எருதுவிடும்.

    திருவிழாவை பார்க்க தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட் டார். பூசாரிவட்டம் பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விழாவை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்ப மோட்டார்சைக்கிளை எடுக்க வந்தார். ஆனால், அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் வெள்ளையகவுண்டனூர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தபோது, மோட்டார் சைக்கிளை திருடியவர் அடையாளம் தெரிந்தது.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத் தியபோது, திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுதாகர் (வயது 27) எனத் தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கனகராஜின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர்.

    அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளை தோட்டத்தின் முன்பு நிறுத்தி சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது45). இவருக்கு அழகர்நாயக்கன்பட்டி சாலையில் தோட்டம் உள்ளது. அங்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்தின் முன்பு நிறுத்தி சென்றார்.

    மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 4 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டை கண் டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரபு மேற்பார்வை யில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டி ருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கி ளில் வந்த ஆற்காட்டை சேர்ந்த ஜெயசந்திரன் (வயது 22), வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் இருவரும் சேர்ந்து ஆற்காடு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் களை திருடியது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் களை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இர்பான். ஐடி நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று புதூர் மேம்பாலம் அருகே பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பைபாஸ் ரோட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி விசாரணை நடத்தினர். பைக்கில் வந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் புதூரில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), குபேந்திரன் (22) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( வயது 51). பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பகலில் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள கனரா வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் எடுத் தார். பின்னர் ஆரணி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய் தார். மீதித்தொகை ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கையில் வைத்திருந்தார்.

    அப்போது வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ததற்கு ஆதார் கார்டு, மற்றும் பான்கார்டு நகலை கேட்டதால் அவர் தனது கையில் வைத்திருந்த பணத்தை ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்தார். பின்னர் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று அங்கு சீட்டுக்கடியில் இருந்த ஆதார் கார்டு, பான்கார்டைஎடுத்து ஜெராக்ஸ் போடச் சென்றார்.

    ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்கும்போது சீட் டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களி டம் கேட்டு பார்த்தார். ஆனால் யாரும் பார்க்கவில்லை என கூறினர்.

    இதையடுத்து ஆரணி டவுன் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற் றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங் குள்ள கண்காணிப்பு கேமராவில் பதி வாகி உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் பணத்தை திருடி சென்ற மர்ம தபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்ட ரில் வைக்கப்பட்ட பணம் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் பைக்கை பறிமுதல் ெசய்து விசாரணை
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பைக் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தது.

    அதனை யாரும் வந்து எடுத்துச் செல்லவில்லை என்று போலீசாரிடம் சைக்கிள் ஸ்டாண்ட் ஊழியர்கள் கூறினர். இது சம்பந்தமாக போலீசார் பைக்கை பறிமுதல் செய்து அதில் உள்ள என்னை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த பைக் ஆம்பூர் எஸ் கே ரோடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பைக்கை மாதனூர் நாச்சார் குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 26) என்பவர் திருடி சென்றதும், பின்னர் பைக்கை ஆம்பூர் சைக்கிள் ஸ்டாண்டில் விட்டதும் தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • உரிமையாளரே பின்தொடர்ந்து வந்து பிடித்தார்
    • உரிமையாளரே பின்தொடர்ந்து வந்து பிடித்தார்

    ஆம்பூர், பிப்.8-

    தஞ்சாவூர் மாவட்டம் எடையம் பாளையம் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் ஜெய பெருமாள் வயது (23) பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஜெயபெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் தங்கி உள்ள வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    நேற்று அதிகாலை ஜெயகாந்தனின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பைக்கில் பொருத்திருந்த ஜிபிஎஸ் கருவியில் இருந்து ஜெயபெருமாள் செல்போனில் குறுஞ்செய்தி வந்தது. விழித்துக் கொண்ட ஜெயகாந்தன் மற்றும் அவரது நண்பர்கள் பைக் செல்லும் பாதையை காரில் பின் தொடர்ந்து வந்தனர்.

    கர்நாடகாவை கடந்து சென்னை தேசிய நெடுங்சாலைக்கு வந்தனர்.

    அப்போது ஜெய பெருமாளின் பைக் வாகனம் நீண்ட நேரமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள காட்டு கொல்லை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜிபிஎஸ் கருவி காட்டி கொடுத்தது.

    இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பகுதியை சேர்ந்த நண்பர்களின் உதவியுடன் காட்டுக் கொல்லை பகுதிக்கு விரைந்த ஜெயபெருமாள் அங்கு பைக்குடன் நின்று கொண்டி ருந்த கொள்ளையர்கள் 5 பேரை கையும் களவுமாக பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை உரிமை யாளரே ஜிபிஆர்எஸ் வசதியுடன் பின்தொ டர்ந்து வந்து கண்டறிந்து கொள்ளையர்களை பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாகன தணிக்கையில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பரதன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 45) விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.

    பின்னர் மறுநாள் அதிகாலை வெளியே வந்து பார்த்தபோது வீட்டில் முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயமானது.

    இது சம்பந்தமாக மோரணம் போலீஸ் நிலையத்தில் வேலு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த பைக் திருடிய கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செய்யாறு போலீஸ் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஆரணி கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    தீவிர விசார ணையில் விவசாயி பைக் என்பது தெரிய வந்தது. பின்னர் செய்யாறு போலீசார் மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வாலிபர்களை மோரணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த நேதாஜி (20), குளிய லம்பாக்கம் பாடசாலை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (19) என்பதும் தெரிய வந்தது. போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியின் ேபாது சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் தடுத்த ரங்காபுரம் ஜங்ஷன் அருகே போலீசார் ரோந்து பணியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    பின்னர் வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    பின்னர் தீவிர விசாரணையில் அவர்கள் மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (35 ) மற்றும் பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த விஜய் (22) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பைக்குகள் திருடு போனது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தன.

    இதையடுத்து வேலூர் தெற்கு போலீசார் பைக் திருடு போன இடங்களில் பதிவான காட்சிகளை வைத்து பைக் திருடர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியை சேர்ந்த தனசேகர் (வயது 45) என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தனசேகரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து 10 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எங்கெங்கு பைக்குகளை திருடினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
    • திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    தேனி:

    பழனிசெட்டிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் பழனிக்குமார். இருசக்கர வாகன காண்டிராக்டர் பணி செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனக்குசொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் பி.சி.பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிந்தாமணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களை ஆய்வு செய்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த முத்து மகன் சரவணபாரதி (வயது 22), திருச்சி சுப்புர மணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மணி (27), மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சங்கர் மகன் சீனிவாசன் (23), பாஸ்கரன் மகன் கண்ணன் (19) என தெரியவந்தது.

    இவர்கள் மீது திருச்சி, சிவகங்கை, கரூர், சிலை மான் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது, கூட்டுக்கொள்ளை அடித்தது, வழிப்பறி செய்து நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×