என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

    • 2 பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இர்பான். ஐடி நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று புதூர் மேம்பாலம் அருகே பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பைபாஸ் ரோட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி விசாரணை நடத்தினர். பைக்கில் வந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் புதூரில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), குபேந்திரன் (22) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×