என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி பைக்கை திருடிய 2 வாலிபர்கள் கைது
- வாகன தணிக்கையில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த பரதன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 45) விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் மறுநாள் அதிகாலை வெளியே வந்து பார்த்தபோது வீட்டில் முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயமானது.
இது சம்பந்தமாக மோரணம் போலீஸ் நிலையத்தில் வேலு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த பைக் திருடிய கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செய்யாறு போலீஸ் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஆரணி கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
தீவிர விசார ணையில் விவசாயி பைக் என்பது தெரிய வந்தது. பின்னர் செய்யாறு போலீசார் மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வாலிபர்களை மோரணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த நேதாஜி (20), குளிய லம்பாக்கம் பாடசாலை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (19) என்பதும் தெரிய வந்தது. போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






