search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alumni"

    • “2001-2006-ம் கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • வெப்படை மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.

    திருச்செங்கோடு,

    திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் "2001-2006-ம் கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பச்சைக்கல் முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.

    முன்னாள் தலைமை ஆசிரியர் செல்லப்பன் முன்னிலை வகித்தார். அவ்வருடங்களில் உதவி தலைமையாசிரியாக இருந்து, தற்போது வெப்படை மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.

    முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியரும் , வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளரும், ஸ்ரீசத்ய சாயி மாவட்டத் தலைவருமாகிய சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் ரமணி, கோபு, காளியப்பன், சேகர், சாந்தி, கந்தசாமி, மகேஸ், மோகனா ஆகியோர் கலந்து கொண்டனர்! அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து ஒன்று கூட 'ஆனந்தப் பறவைகள் ' என்னும் அமைப்பு துவங்கப் பட்டது. மாணவி அனிஷா நன்றி கூறினார் . மாணவர்கள் தியானேஸ்வரும், அனிஷாவும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல் பட்டனர்.

    • கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் 1972-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. 47 முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    பின்பு நடந்த அறிமுக விழாவிற்கு முன்னாள் மாணவர் அதிசய ஜாண் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும் கோவா தொழில் அதிபருமான பால்ராஜ், பள்ளி தாளாளர் ஜேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியரும், பள்ளி முன்னாள் மாணவியுமான கலாவதி மணிமாறன் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் சுவிஷேச முத்து, டாரதி சுவிஷேச முத்து அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். மேலும் அவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் தங்கவேல், அல்வாரில், ஜேசு டேனியல் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் மாணவர் ஜெபதாமஸ் நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவர்கள் சார்பில் கணினி மற்றும் இலவச ஜெராக்ஸ் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அன்பு கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள மாதாப்பட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல் நிலைபள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நடத்தும் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் கணினி மற்றும் இலவச ஜெராக்ஸ் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சசிகலா தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா வரவேற்று பேசினார்.

    நிகழ்சியில் முன்னாள் மாணவர்கள் நடத்தும் அன்பு கரங்கள் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் ராஜசேகர் மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கத்துடனும் சுயகட்டுப்பாட்டு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மாணவர்களிடையே உரையாற்றினார். டாக்டர் புஷ்பலதா மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையோடும், கண்ணியத் தோடும் இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களின் தனித்திறமையை வளர்த்துகொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் அன்பு கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆல்பர்ட், எஸ்.ஆர் .சுப்பிரணியன், தங்கத்துரை,அருணாசலம்,வெள்ளத்துரை ஆகியோர் மாணவர்களிடையே உரைநிகழ்தினர். அறிவியல் ஆசிரியர் கலைசெல்வன் நன்றி கூறினார். முன்னதாக அன்பு கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    • 1976 -77- ம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ். எஸ். எல். சி படித்த முன்னாள் மாணவர்கள் 45 வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    • மேலும் 2021-22- ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1976 -77- ம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ். எஸ். எல். சி படித்த முன்னாள் மாணவர்கள் 45 வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான, டாக்டர் சோமசேகர் தலைமை வகித்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு அனை வரையும் வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரங்கசாமி, பேரூராட்சித் துணைத் தலைவர் முருக வேல், கிராமக் கல்விக் குழு தலைவர் கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாமுனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரி யர்களுக்கு தற்போது அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

    மேலும் 2021-22- ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்.

    முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் ரூ. 3 லட்சம் செலவில் பாண்ட மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சீரணி அரங்கத்தை சீரமைத்து சீரணி அரங்கத்தின் முன்பு தகர மேற்கூரை அமைத்து அதற்கு கான்கிரீட் தளம் அமைத்துக் கொடுத்தனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
    • மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1988-89, 1989-90 ஆகிய கல்வி ஆண்டில் படித்த அறிவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தியூர்-பவானி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணி–வித்து அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    இதில் அந்தியூர், நாகலூர், செம்புளிச்சாபாளையம், பச்சாம்பாளையம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கராபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து படித்த மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் இருந்து வருகின்றார்கள்.

    அந்த மாணவர்கள் தங்களுடைய ஆசிரியருக்கு நினைவு பரிசினை வழங்கியதை பெற்று கொண்ட ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

    சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். #IITStudent #SupremCourt
    புதுடெல்லி:

    இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு இயற்கைக்கு மாறாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டப்படி கிரிமினல் குற்றம் என்பதை சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு உறுதி செய்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். அதில், ஒருவரின் சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக்கி இருப்பது இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமை, கண்ணியம், சுதந்திரம், உணர்வு வெளிப்பாடு ஆகியவற்றுக்கு தடை போடுவதாக உள்ளது. எனவே இதை குற்றச் செயலாக்கி இருப்பதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற ஒரு மனுவை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.  #IITStudent #SupremCourt
    ×