search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol sale"

    அந்தியூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அந்தியூர்:

    காந்தி பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இதை பயன்படுத்தி அந்தியூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்த ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், ‘அவர் அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த சங்கர் (வயது 37) என்பதும், அவர் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சங்கரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அந்தியூர் கருமலையான் கோவில் பகுதியில் மது விற்றதாக அந்தியூர் புதுக்காடு பகுதியை சேர்ந்த சின்னதம்பி (42) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
    தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் மது பாட்டில் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனையும் மீறி பல இடங்களில் மது பாட்டில் விற்றது தெரிய வரவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    போடி அருகே உள்ள குலாளர்பாளையம் வாமனன் தெருவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் பிரபு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்வம் (வயது 55) என்பவர் 192 மது பாட்டில் மற்றும் ½ கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். போலீசார் அவரை கைது செய்து மது மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் பரமசிவம் என்பவரும், உப்போடை பாலம் அருகே ஜெகன் என்பவரும் தேனி பழைய பஸ்நிலையம் எதிரே பூதிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அனுமதியின்றி மது பானங்கள் பதுக்கி விற்பனை செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்ததுடன் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    ஒரத்தநாடு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேரை கைது செய்தனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் திருட்டு தனமாக மது விற்பனை செய்வதாக ஒரத்தநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கூர் கிராமத்தில் ஒருவர் சட்டத்திற்கு விரோதமாக அதிக விலைக்கு மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வடக்கூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரிடம் இருந்த 27 மது பாட்டில்கள், ரூ.2500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பாப்பாநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கண்ணுகுடி பகுதியில் ஒருவர் திருட்டு தனமாக மது விற்றது தெரியவந்தது.

    அங்கு பாப்பாநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முருகேசன் (44) என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைகளில் அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த 8 பேர் கைது.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி திருப்பூர் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட், காலேஜ் ரோடு கொங்கணகிரி பஸ் நிறுத்தம் அருகேயும், திருப்பூர் என்.ஆர்.கே.புரம் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக் கடைகளில் அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மது விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா(வயது 21), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நேதாஜி(46), புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த செழியன்(46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல திருப்பூர் மதுவிலக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் சந்தோஷ்குமார்(24), குமார்(34), சக்தி முருகன்(23), பழனிமுத்து(30), பத்மநாதன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 115 மதுபாட்டில் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    அஞ்சுகிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அழகப்பபுரம் சந்திப்பில் வரும் போது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் ஓடினார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அந்த பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது37) என்பதும் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மயிலாடி சந்திப்பில் அனுமதியின்றி மது விற்றதாக நெல்லை மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மாரியப்பன் (42) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பொம்மிடி அருகே சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளி கிராமத்தில் சந்து கடை அமைத்து மதுபானம் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை போலீசார் மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொம்மிடி- கடத்தூர் ரோட்டில் மதுபாட்டில்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் சமபவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். மது விற்பனை செய்யும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,. மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் சந்து கடை அமைத்து மதுவிற்ற ராணி என்பவரை கைது செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×