search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொம்மிடி"

    பொம்மிடியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் நேற்று மாலை கருமேகத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது.

    பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன் (வயது50). லாரி டிரைவர். நேற்று இரவு வீட்டின் அருகே பலத்த மழை பெய்ததால் அங்கப்பன் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் வீட்டிற்குள் உறங்க சென்றார். அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள குடிசை வீட்டில் அவரது மனைவி தூங்கி கொண்டிருந்தார்.

    அங்கப்பன் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த அங்கப்பன் மீது விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவர் வலியால் அலறினார். சுவர் இடிந்த சத்தம் கேட்டதும் அங்கப்பனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவரை மீட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அங்கப்பனை உடனே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொம்மிடி அருகே அரசு பஸ் மீது கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ரூபன் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு பொம்மிடி அடுத்த எ.பள்ளிப்பட்டி அருகே தனியார் பள்ளி முன்பு டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.

    அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் இது குறித்து டிரைவர் ரூபன் எ.பள்ளிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    பொம்மிடி அருகே சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளி கிராமத்தில் சந்து கடை அமைத்து மதுபானம் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை போலீசார் மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொம்மிடி- கடத்தூர் ரோட்டில் மதுபாட்டில்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் சமபவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். மது விற்பனை செய்யும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,. மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் சந்து கடை அமைத்து மதுவிற்ற ராணி என்பவரை கைது செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×