என் மலர்
செய்திகள்

ஒரத்தநாடு அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் திருட்டு தனமாக மது விற்பனை செய்வதாக ஒரத்தநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கூர் கிராமத்தில் ஒருவர் சட்டத்திற்கு விரோதமாக அதிக விலைக்கு மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வடக்கூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரிடம் இருந்த 27 மது பாட்டில்கள், ரூ.2500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பாப்பாநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கண்ணுகுடி பகுதியில் ஒருவர் திருட்டு தனமாக மது விற்றது தெரியவந்தது.
அங்கு பாப்பாநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முருகேசன் (44) என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






