search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aaron finch"

    துபாய் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து வருகிறது. அறிமுக டெஸ்டில் ஆரோன் பிஞ்ச் அரைசதம் அடித்துள்ளார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. முகமது ஹபீஸ் (126), ஹரிஸ் சோஹைல் (110) சதம் அடித்தனர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 13 ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 17 ரன்னுடனும், ஆரோன் பிஞ்ச் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.


    கவாஜா

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அறிமுக போட்டியில் ஆரோன் பிஞ்ச் 95 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.


    ஆரோன் பிஞ்ச் - கவாஜா ஜோடி

    ஆரோன் பிஞ்சிற்கு இதுதான் அறிமுக டெஸ்ட் ஆகும். அறிமுக டெஸ்டிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். மறுமுனையில் விளையாடும் கவாஜாவும் அரைசதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 46 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் சேர்த்துள்ளது. ஆரோன் பிஞ்ச் 59 ரன்களுடனும், கவாஜா 68 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் சுழற்பந்து வீச்சாளர்களே இடம்பெறவில்லை. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 7-ந்தேதி துபாயில் தொடங்குகிறது.

    இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் விளையாட முக்கிய பங்கு வகிக்கும் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஆனால், வரும் சனிக்கிழமை தொடங்கும் பயிற்சி ஆட்டத்திற்கான பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் இடம்பெறவில்லை. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சமி அஸ்லாம், 2. அபித் அலி, 3. இஃப்தோகர் அகமது, 4. ஆசாத் ஷபிக், 5. உஸ்மான் சலுயாஹுதின், 6. சாத் அலி, 7. அகா சல்மான், 8. முகமது ரிஸ்வான், 9. வஹாப் ரியாஸ், 10. ரஹத் அலி, 11. வகாஸ் மெக்சூட், 12. ஆமெர் யாமின், 13. உமைத் ஆசிப், 14. சவுத் ஷகீல்.
    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் 5 புதுமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட டி20 டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இதில் டெஸ்ட் தொடர் அக்டோபர் 7-ந்தேதி துபாயில் தொடங்குகிறது.

    இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரோன் பிஞ்ச் உள்பட ஐந்து புதுமுக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் டி20 அணியின் கேப்டனாக இருந்த போதிலும் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது.



    ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), 2. அஷ்டோன் அகர், 3. பிரெண்டன் டாக்கெட், 4. ஆரோன் பிஞ்ச், 5. டிராவிஸ் ஹெட், 6. ஜான் ஹோலண்ட், 7. உஸ்மான் கவாஜா, 8. மார்னஸ் லபுஸ்சாக்னே, 9. நாதன் லயன், 10. மிட்செல் மார்ஷ், 11. ஷான் மார்ஷ், 12. மைக்கேல் நேசர், 13. மேத்யூ ரென்ஷா, 14. பீட்டர் சிடில்.

    இதில் பிஞ்ச் உடன் டிராவிஸ் ஹெட், நேசர், டாக்கெட், மார்னஸ் ஆகியோர் இதுவரை டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியது கிடையாது.
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. #ZIMvAUS
    ஜிம்பாப்வேயில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ஆரோன் பிஞ்ச் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    50 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்த பிஞ்ச், 76 பந்தில் 16 பவுண்டரி, 10 சிக்சருடன் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷார்ட் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.2 ஓவரில் 223 ரன்கள் குவித்தது. இவர்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.



    பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிராக 6 போட்டியில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, இந்த முத்தரப்பு தொடரில் தொடர்ந்து இரண்டு வெற்றிகளை ருசித்துள்ளது.
    முத்தரப்பு டி20 தொடரில் ஆரோன் பிஞ்ச் அதிரடியால் 10.5 ஓவரில் 117 ரன்கள் குவித்து பாகிஸ்தானை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா. #AUSvPAK
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டேன்லேக் 4 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் பந்தை துவம்சம் செய்து 27 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஷார்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 10.5 ஓவரிலேயே 117 ரன்களை எட்டியது. இதனால் ஆஸ்திரேலியா 55 பந்துகள் மீதமுள்ள நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ஸ்டேன்லேக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    ×