search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Twenty20 Tri Series"

    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. #ZIMvAUS
    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த லீக் ஆட்டங்கள் முடிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன. இந்நிலையில் முக்கியத்துவம் இல்லா கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி சுவாயோ, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுவாயோ ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் மிர் சிறப்பாக விளையாடி 52 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் மூர் 30 ரன்கள் சேர்க்க ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.



    பின்னர் 152 ரன்க்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆரோன் பிஞ்ச் 3 ரன்னிலும், கேரி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த டிராவிட் ஹெட் 42 பந்தில் 48 ரன்களும், மேக்ஸ்வெல் 38 பந்தில் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஸ்டாய்னிஸ் 7 பந்தில் 12 ரன்கள் அடிக்க 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான இறுதிப் போட்டி 8-ந்தேதி (நாளைமறுநாள்) நடக்கிறது.
    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. #ZIMvAUS
    ஜிம்பாப்வேயில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ஆரோன் பிஞ்ச் ஆட்டத்தில் அனல் பறந்தது.

    50 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்த பிஞ்ச், 76 பந்தில் 16 பவுண்டரி, 10 சிக்சருடன் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷார்ட் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.2 ஓவரில் 223 ரன்கள் குவித்தது. இவர்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.



    பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிராக 6 போட்டியில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, இந்த முத்தரப்பு தொடரில் தொடர்ந்து இரண்டு வெற்றிகளை ருசித்துள்ளது.
    ×