search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Test Championship Final"

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள்.
    • அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதி தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெஸ்ட் அணியில் இருந்து பேட்ஸ்மேன்களில் புஜராவும், பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து புஜரா நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களுக்காக புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    புஜாரா டெஸ்ட் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள். மோசமான பேட்டிங்காக புஜராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்?

    அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் விசுவாசம் உள்ள அமைதியான சேவகர். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடரவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டுவிட்டாரா? மற்றவர்கள் அணியில் இருக்கும் போது புஜரா மட்டும் நீக்கப்பட்டது ஏன்?

    தேர்வுக்குழு என்ன அளவுகோல் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.
    • வானிலைக்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது.

    டெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார்இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பார்க்கும்போது கடந்த முறை இறுதிப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்வது முக்கியது. கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.

    ஆகையால், அதற்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது. அதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, அடுத்த வீரர்களில் கேஎஸ் பரத்தா அல்லது இஷான் கிஷனா என்பதில் எதிர் அணி 2 சுழப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நான் கேஎஸ் பரத்தை சேர்ப்பேன்.

    ஆனால், எதிர் அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினால் நான் இஷான் கிஷனை தேர்வு செய்வேன். அடுத்து ஜடேஜா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், உமேஷ் ஆகியோர் என் தேர்வு செய்யும் வீரர்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ×