search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wells"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்று நீரை இறைக்க பயன்படும் துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • இது பிற்கால பாண்டியர்களின் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டி யில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல் வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

    கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு வகை நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படும். மக்கள் பயன்பாட்டுக்குத் தேவை யான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம்.

    இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோவில் அருகில் வெட்டப்பட்டுள் ளவை திருமஞ்சனக் கிணறு கள் என்றும், வழிப்பாதை களில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.

    இந்நிலையில் ராமநாதபு ரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர், பாட் டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோவில் முன்பு உள்ள ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதைக் கள ஆய்வின் போது கண்டறிந்து படியெ டுத்து படித்து ஆய்வு செய்த னர். இதுபற்றி ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:-

    பாட்டக்குளம் சல்லிப் பட்டி ஸ்ரீபாலாண்டி அய்ய னார் கோவில் முன்பு 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் "ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோற னான விசைய கங்கர் செய்தது உ" என எழுதப்பட் டுள்ளது. இக்கோவில் பாட்டக்குளம் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல் ஆகும். அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத் துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதியின் ஆட்சியா ளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டி ருக்கலாம்.

    இவ்வூருக்கு மிக அருகில் உள்ள விழுப்பனூரிலும் இதேபோன்ற ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்த ரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்த தகவல் உள்ளது. மேலும் விருதுந கரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக ஸ்ரீவில்லி புத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகசேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் பாண்டியர் காலத்தில் கி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியில் இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.

    கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவி யுள்ளதை அறியமுடிகிறது. கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது பிற்காலப் பாண்டியர்களின் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
    • மேற்கண்ட அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட ங்களில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள், குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்க ளை ஏற்படுத்துவதுடன், சில உயிரிழப்புகள் நிகழவும் காரணமாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி கள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்தி யமான அபாயங்களைக் குறைக்க, அனைத்து திறந்த வெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளையும் திறம்பட பாதுகாப்பது அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தல் மற்றும் இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளை விக்கக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில் இவைகளைக் கண்டறிந்து உடனடியாக மூடவும் தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உடனடி நடவடிக்கையாக கைவிட ப்பட்ட குவாரி குழிகளுக்கு சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோன்று நெடுஞ்சாலைகளில், கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளை வலுவான தடுப்புகளை அமைத்திடவும், அவை ஓட்டுநர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். மேற்கண்ட அபாயகரமான இடங்க ளுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.
    • சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திறந்த வெளி கிணறுகள், பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகள் அமைந்துள்ள இடங்களின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மேற்படி ஆபத்து விளைவிக்கும் நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.

    திறந்தவெளி கிணறுகளை சுற்றிலும் உயரம் அதிகமுள்ள தடுப்புச் சுவரினை அமைத்தும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை கடினமான இரும்பு மூடிகள் அமைத்தும், குவாரி பள்ளங்கள் மற்றும் திறந்தவெளி பள்ளங்களை பொருத்த மட்டில் கம்பி வேலி அமைப்புகளை ஏற்படுத்தியும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்

    அனைத்து அரசு துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட மேற்படி அமைப்புகள் குறித்த பட்டியலினை ஒரு வார காலத்திற்குள் எடுத்து, அவற்றின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையினை 10 தினங்களுக்குள் சமர்பித்திட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் மற்றும் பள்ளங்களை பொறுத்தமட்டில் தொடர்புடைய அரசு துறையினர் 10 தினங்களுக்குள் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்தல் தேவையான இடங்களில் புதியதாக ஏற்படுத்துதல் மற்றும் சாலைகளின் எல்லைகளில் இரும்பு பாதுகாப்பு தகடுகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் அமைப்புகளை ஏற்படுத்துதல், சாலைகளில் தேவையான இடங்களில் கூடுதல் வெள்ளை மற்றும் மஞ்சன் நிற கோடுகள் அமைத்து அதன் அறிக்கையினை 28-ந்தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். நில உடைமையாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறினால் அவர்களுக்கு எதிராக பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கருதி சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசாணை வெளியிட்ட பின் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்க வேண்டும்.
    • ஆழ்துளை கிணறுகள் அமையவிருக்கும் பகுதியில் கதவணை அமைக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுகாவில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார்.

    கல்யாணசுந்தரம் எம்.பி., பாபநாசம் தாசில்தார் பூங்கொடி , கூட்டு குடிநீர் திட்ட நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நில நீர் வல்லுநர் லெட்சுமணன், ஒன்றியகுழு தலைவர்கள் கலைச்செ ல்வன், சுமதி .கண்ணதாசன் , மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, கூத்தரசன், அமானு ல்லா ஆகியோர் முன்னிலை ,வகித்தனர்.இந்த கூட்டத்தில், கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்குவதற்கு முன்னர் நிலத்தடி நீரை தக்க வைக்கும் பொருட்டு ஆழ்துளை கிணறுகள் அமையவிருக்கும் பகுதியில் கதவணை அமைக்க அரசை கேட்டுக் கொண்டு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பணிகளை தொடங்குவதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம்.

    அரசு சார்பில் வாழ்க்கை - தூத்துர் இடையே கொள்ளிடத்தில் கதவணை கட்ட அறிவிப்பு வழங்கி அரசாணை வெளியிட்ட பின் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயப் பிரதிநிதிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    • மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது, பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது
    • 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், திறந்தவெளி கிணற்றில் விழுந்து கடந்த மூன்றாண்டில் மட்டும் 336 பேர் இறந்துள்ளனர்.மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடி க்கை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் நேரடி கண்காணிப்பில், அந்தந்த மாவட்டங்களில், பேரிடர் சார்ந்து மக்கள் எதிர்கொ ள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராம,நகர்ப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் நீரில் சிக்கி பலியாகின்றனர்.நெடுஞ்சாலை ஓரங்களில் திறந்து நிலையிலும், வேலி அமைக்கப்படாத கிணற்றிலும் தவறி விழுந்து பலரும் உயிரிழக்கின்றனர்.

    உயரும் பலி எண்ணிக்கை : கடந்த 2020ல் 104 பேர், திறந்தவெளி கிணறு, குளங்களில் விழுந்து இறந்துள்ளனர். 2021ல் 109 பேர்; 2022ல் 123 பேர் என மூன்றாண்டில் மட்டும் 336 பேர் பலியாகியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்க ளுக்கு கடந்த 2020ல் குளம் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க கேட்டு 687 அழைப்புகள் வந்துள்ளன. 2021ல் இது 1,308,2022ல் இது 2032 அழைப்புகளாக அதிகரித்துள்ளது.இதில் 80 சதவீதம் அழைப்புகள் திறந்தவெளி கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பாக தான்.மனிதர்கள் மட்டுமின்றி பூனை, நாய், மான் உள்ளிட்ட பிராணிகளும் அவ்வபோது திறந்தவெளி கிணற்றில் விழுகின்றன.கடந்த 2020ல் 356, 2021ல், 846, கடந்த 2022ல், 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    • சாலையோரத்தில் நீதிமன்றத்திற்கு அருகிலேயே தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி விவசாய கிணறு உள்ளது.
    • சாலையோரத்தில் காணப்படும் திறந்தவெளி கிணறுகளுக்கு தடுப்புச் சுவர்கள் அமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேரூராட்சியில் குடியிருப்புகள் அமைந்துள்ள அக்ரஹாரம் பகுதியில் இருந்து கிழக்குக்காடு, கணபதி தெரு பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு சாலையோரத்தில் நீதிமன்றத்திற்கு அருகிலேயே தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி விவசாய கிணறு உள்ளது. இச்சாலையின் முகப்பில் கேட்டுக்காரர் தோட்டத்திலும் தடுப்புச்சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு உள்ளது. இதேபோல் இச்சாலையில் இருந்து கூட்டுறவு பால் கொள்முதல் நிலையம் மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலையிலும் குடியிருப்பு பகுதிக்கு அருகே பாழடைந்த திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது.

    இந்த சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறினாலோ, வாகன ஓட்டிகளின் கவனம் குறைந்தாலும், வாகனங்கள் நேராக கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து நேரிடும் அபாய நிலை உள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையோரத்தில் காணப்படும் திறந்தவெளி கிணறுகளுக்கு தடுப்புச் சுவர்கள் அமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    குயிலம் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சுற்றித்திரிந்து வருகின்றனர்.
    வாணாபுரம்:

    வாணாபுரம் அருகே உள்ள குயிலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு பிறகு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே, ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×