search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile Park"

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் பல்லடம், சோமனூர் பகுதிகளில் அதிகப்படியான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெற, பல்லடத்தை மையமாகக் கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கடந்த 2017 முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசே நிலம் அளித்து, அதில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை திட்டம் கிடப்பில் உள்ளது.

    சமீபத்தில் கோவை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். எங்களது பல நாள் கோரிக்கையின்படி பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைத்து தர வேண்டும். இதனால் நெசவாளர்கள் சொந்த விசைத்தறியாளர்களாக மாற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.
    • இதனால் 7 ​​லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.

    சென்னை:

    ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் பி.எம். மித்ரா திட்டத்தின்கீழ் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே, மத்திய அமைச்சரவை அனுமதியளித்த இருந்த நிலையில் இந்த அறிவிப்பு நேற்று வெளியானது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், ஜவுளி பூங்கா அமைக்க தமிழகத்தின் விருதுநகரை தேர்வு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • இந்த கூட்டத்தில் துணி நூல் ஆணையர்-கலெக்டர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி தொடர்பான வாய்ப்புகள் குறித்தும் ஜவுளி தொழில் முனை வோர்களிடையே விழிப்பு ணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார்.

    இதில் துணி நூல் ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கி பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் இ.குமாரலிங்காபுரத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. தமிழ்நாடு அரசு துணி நூல் துறையின் மூலம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை வளப்படுத்தும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்கான ஆலோச னைகளை தொழில்முனை வோர்கள் வழங்கலாம்.தமிழ்நாட்டை ஜவுளி துறையில் முக்கியமாக தொழில்நுட்ப ஜவுளித்துறையை வளர்ச்சி அடைய செய்திட கடந்த மாதம் சென்னையில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட International Technical Textile - Conference இதற்கு ஒரு உதாரணமாகும்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உகந்த இடமாக இருப்ப தற்காகவும், அதிக அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், ஜவுளி உற்பத்தியை பெருக்கி, உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக வும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணி நூல் இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ், மண்டல துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முடிவு
    • விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என பல்லாண்டுகளாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்திற்கு குடியாத்தம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்ப டும் என வாக்குறுதி அளித்தார்.

    அதேபோல் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்திலும் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 10 முக்கியமான கோரிக்கைகள் பட்டியலிலும் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கைத்தறி துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் கே.வி. கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், எம்.எஸ்.குகன், ஏ.தண்டபாணி, சுமதிமகாலிங்கம், இந்துமதி கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட கைத்தறி துணி நூல் அலுவலர் பி.முத்துராமலிங்கம் தலைமையில் கைத்த றித்துறை அதிகாரிகளும், குடியாத்தம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் பி.சரவணன் தலைமையில் சங்க நிர்வாகிகளும், குடியாத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.அண்ணா மலை தலைமையில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது இந்த கலந்துரையாட கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கவும், அந்த ஜவுளி பூங்காக்களின் உட்கட்டமைப்பு, பொது வசதி மையம், தொழிற்கூட கட்டுமான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது இரண்டு கோடி 50 லட்சம் ரூபாய் மாநில அரசு மானியமாக வழங்குவது குறித்தும் அதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த ஜவுளி பூங்கா அமைக்க குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலமும் குறைந்த பட்சம் 3 தொழில் கூடங்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஜவுளி பூங்கா அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆகிேயார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்பொழுது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான ஜவுளிபபூங்காக்கள் அமைப்பதன் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை சிவகங்கை மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 39, விஸ்வநாதபும் மெயின்ரோடு, மதுரை-14 என்ற முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்.94435 55581.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×