search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stunt Master"

    • கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல சுவாரசியமான திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
    • லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளனர்

    கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல சுவாரசியமான திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

    அதைத்தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார், மேலும் இந்தியன் 2, கல்கி 2898 ஏ.டி போன்ற  படங்களில் நடித்து இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கிறது.

    தற்பொழுது கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் சமீபத்தில் வந்த லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இவரே இயக்கியுள்ளனர்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு மணி மற்றும் அறிவுமணி ஆகியோரின் நீக்கம் செல்லாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #StuntMaster #AnbuMani #ArivuMani
    ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணி புரிந்தவர்கள் அன்புமணி மற்றும் அறிவுமணி. இரட்டை சகோதரர்களான இவர்கள் அன்பறிவ் என்ற பெயரில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து வந்தனர். இருமுகன், காலா என முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்கள் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து கடந்த 16-ந்தேதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சங்கத்தலைவர் சோம சுந்தர் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் பணிபுரியும் படப்படிப்பு தளத்திற்கு சென்று படப்படிப்பை தடுத்து நிறுத்தினர்.

    இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆதிகேசவலு, அன்பறிவ் மீதான நடவடிக்கையை கட்டுப்படுத்த இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.



    அந்த சங்கத்தின் தலைவர் சோமசுந்தர் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் சங்க அலுவலக ஊழியர்கள் யாரும் அன்புமணி மற்றும் அறிவுமணி (அன்பறிவ்) பணிபரியும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவர்களின் பணிக்கு குறுக்கீடு செய்ய கூடாது என்றும் உத்தரவிட்டார்.
    ×