search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் நீக்கம் செல்லாது - ஐகோர்ட்டு உத்தவு
    X

    ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் நீக்கம் செல்லாது - ஐகோர்ட்டு உத்தவு

    ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு மணி மற்றும் அறிவுமணி ஆகியோரின் நீக்கம் செல்லாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #StuntMaster #AnbuMani #ArivuMani
    ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணி புரிந்தவர்கள் அன்புமணி மற்றும் அறிவுமணி. இரட்டை சகோதரர்களான இவர்கள் அன்பறிவ் என்ற பெயரில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து வந்தனர். இருமுகன், காலா என முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்கள் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து கடந்த 16-ந்தேதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சங்கத்தலைவர் சோம சுந்தர் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் பணிபுரியும் படப்படிப்பு தளத்திற்கு சென்று படப்படிப்பை தடுத்து நிறுத்தினர்.

    இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆதிகேசவலு, அன்பறிவ் மீதான நடவடிக்கையை கட்டுப்படுத்த இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.



    அந்த சங்கத்தின் தலைவர் சோமசுந்தர் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் சங்க அலுவலக ஊழியர்கள் யாரும் அன்புமணி மற்றும் அறிவுமணி (அன்பறிவ்) பணிபரியும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவர்களின் பணிக்கு குறுக்கீடு செய்ய கூடாது என்றும் உத்தரவிட்டார்.
    Next Story
    ×