search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pookuzhi"

    • பரமக்குடி அருகே சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் சதுரங்க நாயகி அம்மன் சந்தன கருப்பு சாமிகள் கோவில் உள்ளது. இங்கு 20-ம் ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருமணம் வரம் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும், நேர்த்திக்கடனாகவும் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மானாமதுரை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூக்குழி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் பக்தி பரவசத்துடன் நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.

    விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் உற்சவ விழா மற்றும் முளைப்பாரி நடைபெற்றது. இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் கோவிலுக்கு எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வேண்டுதல் நிறை வேற்றினர். பல பக்தர்கள் இடுப்பில் குழந்தைகளை கட்டிக்கொண்டு தீ மிதித்தனர்

    அதன்பின் மாரியம்ம னுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • திருவிழாவில் 576 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • திருவிழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி வட்டாரத்தில் பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

    நேற்று மாலை கிருஷ்ணர், திரவுபதிஅம்மன், அர்ச்சுனர் ஆகிய சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவில் முன்பாக உள்ள திடலில் இருந்து புறப்பட்டு சப்பரத்திற்கு முன்பாகவே சென்று முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 6.30 மணி அளவில் 576 பேர் பூக்குழி இறங்கத் தொடங்கினர். முதலில் கோவில் பூசாரி மாரிமுத்து பூ இறங்கினார்.

    தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக பூக்குழி இறங்கினர். 7.30 மணியளவில் அனைவரும் பூ இறங்கி முடித்தனர்.

    திருவிழாவில் பேரூராட்சி பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர், ராணி கருப்பாயி நாச்சியார் கோவில் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன்,

    உதவியாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ், வீரசேகரன், தலையாரிகள் அழகுராஜா, வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பூக்குழித் திருவிழாவை காண சிவகிரி மற்றும் ராயகிரி, வாசுதேவநல்லூர், தளவாய்புரம், சேத்தூர், கரிவலம்வந்தநல்லூர் போன்ற பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    ×