search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poojai"

    • இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம்.
    • மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

    கிழக்கு: இத்திசை நோக்கி, தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாக்குவார்கள்.

    தென்கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

    தெற்கு: வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத்தரலாம்.

    தெற்மேற்கு:இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

    மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

    வடமேற்கு:இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்ப சண்டைகள் நீங்கும்.

    வடக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

    வடகிழக்கு:இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர் தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

    • அதுமட்டுமல்ல தீபச்சுடரில் இருந்து வெளியாகும் சக்தி ஆக்சிஜனை அதிகரித்து தரும்.
    • இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் குலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.

    தேங்காய் எண்ணை தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.

    இலுப்பை எண்ணை தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

    வேப்ப எண்ணை தீபம் ஏற்றினால் கணவன், மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.

    வேப்பெண்ணை, இலுப்ப எண்ணை, நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும்.

    மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.

    நெய், விளக்கு எண்ணை, இலுப்பைஎண்ணை, தேங்காய் எண்ணை நல்லெண்ணை என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும்.

    அதுமட்டுமல்ல தீபச்சுடரில் இருந்து வெளியாகும் சக்தி ஆக்சிஜனை அதிகரித்து தரும்.

    இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இதை நம் மூதாதையர்கள் உணர்ந்திருந்தனர். எனவேதான் வீடுகளில் தினமும் விளக்கேற்றுங்கள்.

    ஆலயங்களில் 108 தீபம், லட்சதீபம் ஏற்றுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

    • ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.
    • நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கை கூடும். செல்வம் பெருகும்.

    ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.

    இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும் மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.

    நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நிவர்த்தியாகும்.

    ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.

    நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கை கூடும். செல்வம் பெருகும்.

    நல்லெண்ணை தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.

    நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும், நவகிரக தோசம் நிவர்த்தி தரும்.

    எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணை ஏற்றது.

    விளக்கு எண்ணை தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.

    • நெய் அல்லது எண்ணை விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.
    • இரண்டு திரிகளை ஒன்றாகச்சேர்த்து முறுக்கி திரி இட வேண்டும்.

    தீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு துலக்கியோ அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்த வேண்டும்.

    விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூவினைச் சூட்ட வேண்டும். (அகல் விளக்காயின் வெளிப்புறத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்ற வைக்கவும்).

    நெய் அல்லது எண்ணையை விளக்கில் ஊற்றும் போது விளக்கு நிறைய ஊற்ற வேண்டும்.(அதாவது குளம் போல). அதன் பின் தான் திரி இட வேண்டும்.

    நெய் அல்லது எண்ணை விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.

    இரண்டு திரிகளை ஒன்றாகச்சேர்த்து முறுக்கி திரி இட வேண்டும்.

    இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

    திரியை நன்கு நெய்யிலோ, எண்ணையிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்றவேண்டும்.

    • தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக்கூடியது.
    • வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

    வீடுகளில் தினமும் தீபம் ஏற்றவேண்டும்.

    குறிப்பிட்ட எண்ணை மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள்.

    எனவே வீட்டில் தினமும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.

    தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக்கூடியது.

    தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும், இருப்பதாகக் கருதப்படுகிறது.

    எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்சதீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

    அதே போல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

    கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    • இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.
    • எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது.
    • இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    வீட்டில் பூஜைகள் செய்வதை முதலில் நாம் ஒரு பயிற்சி மாதிரி கூட தொடங்கலாம்.

    பிறகு அதுவே பழக்கமாகி விடும். அந்த பழக்கம் நீடித்தால் அது வழக்கமாகி ஒரு புதிய மரபை ஏற்படுத்தி விடும்.

    தினசரி வாழ்க்கையில் நாம் தினமும் எப்போது சாப்பிட்டு பழகுகிறோமோ, அந்த நேரம் வந்ததும் பசி வயிற்றை கிள்ளத்தொடங்கி விடும்.

    தூங்கும் நேரம் வந்ததும் கண்கள் சொக்கத்தொடங்கி விடும்.

    அது போலவே அதிகாலையில் இறைவனுக்கு பூ போட்டு பூஜை செய்து பழகி விட்டால், அது உங்களை தினம், தினம் இறைவன் பக்கம் கொண்டு வந்து விடும்.

    இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.

    எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது. இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    அதுமட்டுமா குடும்பத்தில் மகிழ்ச்சி, உள்ளத்தில் ஒருவித சந்தோஷம், கடவுளுடன் நெருங்கி விட்டோம் என்ற நெகிழ்ச்சி போன்ற எல்லாம் கிடைத்து விடும்.

    கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் இவையெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.

    ஒருநாள்..... ஒரே ஒருநாள் வீட்டில் முழுமையான பூஜையை கேட்டு தெரிந்து கொண்டு செய்து பாருங்கள்.

    இறை அனுபவத்தை உணர்வீர்கள்.

    • கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.
    • இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    பூஜை அறையில் 21 தாமரைப் பூக்கள் வடிவத்தை அரிசி மாவால் கோலம் போட்டு அதன் மேல் சந்தன,

    குங்கும பொட்டு வைத்து ஸ்ரீ கனகதார ஸ்லோகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காசு வைத்து பூஜிக்கவும்.

    கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.

    ஓம்ஸ்ரீம் ஹீரீம் தனநாயிகாயை!

    ஸர்வா கர்ஷண தேவ்யாயை!

    ஸர்வ தாரித்ர்ய நிவாரண்யை!

    ஓம் ஸ்ரீம் ஹீரீம் ஸ்வாஹா!

    இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி தினமும் பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
    • மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி அங்கு உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனி மாத அமாவாசை நாளான நேற்று கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர். மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல கோத்தகிரி கடைவீதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன், பண்ணாரி மாரியம்மன், டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களில் ஆனி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டன.

    • குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.
    • திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது. இக்கோவிலில் மாசி மற்றும் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவராத்திரி அன்று இரவு 8 மணிக்கு மூன்று முகம் கொண்ட படலம் வீதி உலா வருதல், மறுநாள்மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், திருமஞ்சனக் குடம் எடுத்து சக்தி நிறுத்துதல் நடந்தது.

    10-ம் திருநாள் மாலை 6 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும், இரவு 12 மணிக்கு மேல் கொடி இறக்கி கொடிமர பூஜை, பைரவர் பூஜை நடந்தது. பேச்சியம்மன் பிரம்மராட்சதை அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அமுதுபடைத்து சிறப்பு தீபாராதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவிழா நாட்களில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் ராமன் பிள்ளை, ஜோதி முருகன் பிள்ளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
    • 16 வகையான பொருட்களால் அபிஷேகம்

    அரியலூர்:

    உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள சசீதளாதேவி என்ற மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் பூஜையில் 16வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள சிவகாமியம்மன் சமேத ஸ்ரீ நடராஜபெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் பூஜை நடைபெற்றது. இதில் 16வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    ×