search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar Award"

    • தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது
    • விருதாளர் தமிழக முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

    தென்காசி:

    சமூக நீதிக்காக பாடுபடு பவர்களை சிறப்பு செய்வ தற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    ரூ.5 லட்சம் பரிசு

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்ப டுகிறது.


    இவ்விருதாளர் தமிழக முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.


    எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடைய நபர்கள் தங்களது பெயர், பிறந்த இடம், நாள், தாய்,தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி தொலைபேசி எண், கல்வி தகுதி,தொழில், சமூக நீதிக்காகப் பாடுபட்ட விவரம்,

    பெரியார் கொள்கை களில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை குறித்து சிறுகுறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு போன்ற விவரங்களை உள்ளடக்கிய தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

    2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநார ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிரம், முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திராவிட கழகம் சார்பில் இயக்குநர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மீரா கதிரவன், இதனை தனது வாழ்வின் உயரிய விருதாக கருதுவதாக கூறினார். #MeeraKathiravan #PeriyarAward
    `அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறும்போது,

    என்னுடைய இரண்டு படங்களையும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியிருகின்றன. எனது முதல் படமான அவள் பெயர் தமிழரசி, திரைக்கு வருவதற்கு முன்பே துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு கவனத்தைப் பெற்றது. இப்போது, திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.



    இந்த பெரியார் விருதானது கடந்த 1995 முதல் கடந்த 24 வருடங்களாக சமூகம் மற்றும் கலை, பண்பாட்டுத் தளங்களில் முக்கிய பங்காற்றி சிறந்து விளங்கி வரும் ஆளுமைகளூக்கு வழங்கப்படுகிறது. சென்ற வருடங்களில் திரைப்பட துறையிலிருந்து இயக்குநர்கள்  ராஜு முருகன், கோபி நயினார், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்  பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    தமிழர் பண்பாட்டு கலைகளை முதன்மைப்படுத்தியும், திரைநுட்பங்களில் தேர்ந்தும், திரைப்படங்களை வழங்கிடும் படைப்பூக்கத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் திரைப்படத் துறையிலிருந்து என்னை சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுத்து, பெரியார் விருதினை வழங்கியுள்ளார்கள். மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்து மனிதர்களாக வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல்வாக்கினை செலுத்திக் கொண்டு இருக்கிறார். அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன். 



    இந்த விருதை வழங்கிய திராவிட கழக தலைவர், திரு.கி.வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். #MeeraKathiravan #PeriyarAward

    ×