search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mickey Arthur"

    • இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது.

     புதுடெல்லி:

    உலக கோப்பை போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பாகிஸ்தான் போராடாமலே இந்தியாவிடம் எளிதில் சரண் அடைந்தது. இதனால் இந்த ஆட்டம் ஒரு பக்கமாகவே இருந்தது.

    பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், தென்ஆப்பிக்காவை சேர்ந்தவருமான மிக்கி ஆர்தர் இந்த தோல்வி குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:-

    இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது. மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் இருந்தனர். பாகிஸ்தானை ஊக்கப்படுத்தும் எந்த செயல்களும் களத்தில் நிகழ அனுமதிக்கப்படவில்லை.

    இதுவும் ஒரு காரணம்தான். இதை நான் சாக்காக கூறப்போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

    மிக்கி ஆர்தரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அவரை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக வாசிம்அக்ரம் கூறியதாவது:-

    இந்தியாவிடம் மோசமாக தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம் என்று மிக்கிஆர்தரை கேட்டுக் கொள்கிறேன். குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது? என்று எங்களிடம் சொல்லுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

    இந்த தோல்வியில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இப்படி பேசுகிறீர்களா? துரதிருஷ்டவசமாக உங்களால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வலைப் பயிற்சியைப் பார்த்து அசந்து விட்டேன் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் பிரிவிலும், சூப்பர் 4 சுற்றிலும் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு எந்த அளவிலும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். குறிப்பாக ‘டெத்’ ஓவரில் அசத்தினார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் ஐசிசி அகாடமியில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பும்ராவின் பந்து வீச்சை பார்த்து சிலிர்த்து போய்விட்டார். பும்ராவின் பந்து வீச்சு வீடியோவை காண்பித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பேன் என்றார்.



    இதுகுறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பயிற்சியின் போது நாங்கள் 20 நிமிடம் அமர்ந்து, பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்தோம். யார்க்கர், யார்க்கர் என அடுத்தடுத்து யார்க்கராக வீசி அசத்தினார். அவரது பந்து வீச்சு என்னை மிகவும் ஈர்த்தது. அதை எங்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.

    நாங்கள் பும்ராவின் பந்து வீச்சை வீடியோவை காண்பித்து, ‘டெத்’ ஓவரில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்களது வீரர்களுக்கு கற்றுக் கொடுப்போம்’’ என்றார்.

    நாளை நடைபெறும் வங்காள தேசம் - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், வெள்ளிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
    ×