search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Miami"

    • புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கப்பட்டது என்றது அட்லஸ் ஏர்
    • நடந்து கொண்டிருந்த மெலனி, வானில், விமானத்தின் பின்புறம் தீயை கண்டார்

    அமெரிக்காவின் அட்லஸ் ஏர் ஃப்ளைட் (Atlas Air Flight) எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 5Y095 சரக்கு விமானம், வியாழன் அன்று புளோரிடா மாநில மியாமி விமான நிலையத்திலிருந்து கரீபியன் தீவில் உள்ள ப்யூர்டோ ரிகோ (Puerto Rico) பகுதியின் ம்யூனோஸ் மரின் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

    "இரவு 10:22 மணிக்கு புறப்பட்ட போயிங் 5Y095 , எஞ்சின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் 10:30 மணிக்கு மியாமி விமான நிலையத்தில் மீண்டும் தரை இறக்கப்பட்டது" என அட்லஸ் விமான நிறுவனம் செய்தி வெளியிட்டது.

    ஆனால், இந்த விமானத்தில் பின்புறத்தில் தீ வெளிப்பட்டுள்ளது.

    மஞ்சள் கலந்த செந்நிற தீயை வெளிப்படுத்திய அந்த காட்சியை மியாமி நகரத்தை சேர்ந்த மெலனி அடராஸ் (Melanie Adaros) என்பவர், தனது தாயாருடன் நடந்த சென்று கொண்டிருந்த போது எதேச்சையாக கண்டுள்ளார்.

    இரவு வானில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்டு, அப்பொழுதே தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

    குறைந்த மற்றும் அதிக எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்லவும், பிரபலமானவர்களை குழுக்களாக நீண்ட தூரம் கொண்டு செல்லும் சேவையிலும் அட்லஸ் ஏர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


    சில தினங்களுக்கு முன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு போயிங் விமானத்தில், பயணத்தின் போதே, நடுவானில், ஒரு கதவு திறந்து கொண்டதையடுத்து, அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த போயிங் விமான சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


    • சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயிஸ் திருடு போனது
    • துப்பு தருபவர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவித்திருந்தார்

    அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி, பல கோடீசுவரர்களின் விருப்பமான வசிப்பிட பகுதியாக உள்ளது.

    ஏரியல் பேனர்ஸ் (Aerial Banners) எனும் நிறுவனத்தின் உரிமையாளரான பாப் பென்யோ (61) எனும் பெரும் கோடீசுவரர் இங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள இவரது மிக பெரிய பண்ணை வீட்டில் தனது பல கார்களுடன் ஒரு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் (Rolls Royce Wraith) காரையும் பாப் வைத்திருந்தார். இதன் விலை சுமார் ரூ.2 கோடி ($250,000) இருக்கும்.

    சில நாட்களுக்கு முன் அவரது மனைவி ஓல்கா பென்யோ (41) தனது 2 குழந்தைகளுடன் அக்காரில் வெளியே சென்று விட்டு மீண்டும் பங்களாவிற்கு திரும்பினார். அவர் காரை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு பங்களாவிற்கு உள்ளே சென்ற சிறிது நேரத்தில் 2 திருடர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் அக்காரை சுலபமாக சிறிது நேரத்தில் அவர்கள் திருடி வெளியே வேகமாக ஓட்டி சென்று விட்டனர். பங்களாவின் நிறுத்துமிடத்தின் ரிமோட் உபகரணத்தை போன்றே தாங்களாக ஒன்று தயார் செய்து வந்து அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவரது நிறுத்துமிடத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் ஒன்றும், 1970 செவர்லே காரும் இருந்தது. அந்த கார்களை விட்டு விட்டு ரோல்ஸ் ராயிஸ் காரை திருடி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து கார் திருடு போனதை காவல்துறையிடம் தெரிவித்த பாப் பென்யோ, காணாமல் போன காரை கண்டு பிடித்து தர வித்தியாசமாக விளம்பரம் செய்தார்.

    ஒரு விமானத்தின் பின்பகுதியில் ஒரு மிக பெரிய பேனரில் தனது செல்போன் நம்பருடன் "காணவில்லை - ஊதா நிற ரோல்ஸ் ராயிஸ்" என குறிப்பிட்டு, அத்துடன் அதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சுமார் ரு.4 லட்சம் ($5000) பரிசும் அறிவித்திருந்தார்.

    அந்த விமானம் இந்த பேனருடன் வானில் மியாமி நகர் முழுவதும் பறந்தது.

    அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண், அந்த ரோல்ஸ் ராயிஸ் காரை தான் கண்டதாக தகவல் தந்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அதை மீட்டனர். கார் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அதனுள்ளே பென்யோவின் மனைவி வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தது.

    காணாமல் போன விலையுயர்ந்த காருக்காக பாப் கையாண்ட நூதன விளம்பர வழிமுறை சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்படுகிறது.


    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை, ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெளியேறினார். #MiamiOpen #NovakDjokovic #BautistaAgut
    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை, ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெளியேறினார். #MiamiOpen #NovakDjokovic #BautistaAgut

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டை சந்தித்தார்.



    2 மணி 29 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் பாவ்டிஸ்டா அகுட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த சீசனில் பாவ்டிஸ்டா அகுட், ஜோகோவிச்சை சாய்த்து இருப்பது இது 2-வது முறையாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 7-5, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 51 நிமிடம் நடந்தது. இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 7-6 (7-5), 7-6 (7-3) என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ஜான் இஸ்னர், பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதுகிறார்.

    மற்ற ஆட்டங்களில் டெனிஸ் ஷபோவாலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), பிரான்சஸ் டியாபோ (அமெரிக்கா), பெலிக்ஸ் அகெர் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 2 மணி 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆஷ்லிக் பார்டி, கிவிடோவாவை தோற்கடித்தது இதுவே முதல்முறையாகும்.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹிசை சு வெய்யை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), அர்ஜென்டினா வீரர் பெடெரிகோ டெல்போனிசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #NovakDjokovic #MiamiOpenTitle
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் பெடெரிகோ டெல்போனிசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 22-ம் நிலை வீரரான பாடிவ்ஸ்டா அகுட் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியை சாய்த்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். 4-வது சுற்றில் ஜோகோவிச்-பாடிவ்ஸ்டா அகுட் ஆகியோர் மோதுகிறார்கள். மற்ற ஆட்டங்களில் கைல் எட்முன்ட் (இங்கிலாந்து), நடப்பு சாம்பியன் ஜான் இஸ்னர் (அமெரிக்கா), பெலிக்ஸ் அகெர் (கனடா), நிகோலோஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா), போர்னா கோரிச் (குரோஷியா), நிகோலஸ் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 3-6, 2-6 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தட்ஜனா மரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். #Trump #Golfclub
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கோல்ப் கிளப்
    அருகில் நேற்று மர்ம நபர் சென்றார். அவர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கோல்ப் கிளப்பின் உள்பகுதியை நோக்கி சரமாரியாக சுட்டார்.



    இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் மியாமி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி வைத்திருந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த ஆசாமி ஏன் சுட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trump #GolfClub
    ×