என் மலர்

  செய்திகள்

  மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
  X

  மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), அர்ஜென்டினா வீரர் பெடெரிகோ டெல்போனிசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #NovakDjokovic #MiamiOpenTitle
  மியாமி:

  மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் பெடெரிகோ டெல்போனிசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 22-ம் நிலை வீரரான பாடிவ்ஸ்டா அகுட் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியை சாய்த்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். 4-வது சுற்றில் ஜோகோவிச்-பாடிவ்ஸ்டா அகுட் ஆகியோர் மோதுகிறார்கள். மற்ற ஆட்டங்களில் கைல் எட்முன்ட் (இங்கிலாந்து), நடப்பு சாம்பியன் ஜான் இஸ்னர் (அமெரிக்கா), பெலிக்ஸ் அகெர் (கனடா), நிகோலோஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா), போர்னா கோரிச் (குரோஷியா), நிகோலஸ் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 3-6, 2-6 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தட்ஜனா மரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள்.
  Next Story
  ×