search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshminarayanan"

    • தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக மீன்பிடி இறங்கு விரிவாக்கம் செய்ய 100 சதவீத மானியத்துடன் நிதியுதவி கோரி கோப்புகள் அனுப்பப்பட்டன.
    • ரூ.2 கோடி வைப்பு தொகையாகவும், நல்லவாடு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடியும் வைப்பு தொகையாக வழங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மீன்வளத்துறை தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது: -

    முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின்பேரில் புதுவை அரசு மீன்வளம், மீனவர் நலத்துறை மூலம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்திற்கு 2 மீன் இறங்கு நிலையம், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக மீன்பிடி இறங்கு விரிவாக்கம் செய்ய 100 சதவீத மானியத்துடன் நிதியுதவி கோரி கோப்புகள் அனுப்பப்பட்டன.

    இதை ஆய்வு செய்த மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அனுப்பிய திட்டத்திற்கு 22.3.2023-ல் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.20.14 கோடியில் பெரியகாலாப்பட்டு பகுதியில் மீன் இறங்கு நிலையம், ரூ.18.94 கோடியில் நல்லவாடு பகுதியில் மீன் இறங்கு மையம், ரூ.53.39 கோடியில் தேங்காய்திட்டு துறைமுகம் (அரிக்கன்மேடு பிரிவு) கட்டுமானம், மீன்பிடி விரிவாக்கம் என மொத்தம் ரூ.92.47 கோடி வழங்கியுள்ளது.

    மேலும் பெரிய காலாப்பட்டு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.2 கோடி வைப்பு தொகையாகவும், நல்லவாடு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடியும் வைப்பு தொகையாக வழங்கியுள்ளது. ஆக மொத்தம் ரூ.100 கோடியே 47 லட்சம் அளவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இத்திட்டங்களை 12 முதல் 18 மாதத்தில் முடிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அனுமதியளித்த பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, இணை அமைச்சர் முருகன் ஆகியோருக்கு நன்றி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.

     புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    2022ம் ஆண்டுக்கான உலக மீன்வள தினவிழாவை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கு கோலப்போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப்பந்தயம், வலைபின்னும் போட்டி நடைபெற்றது.

    பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.48 ஆயிரம் பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கோவிந்தசாமி, மீன்வள உதவி ஆய்வாளர்ஆறுமுகம் மற்றும் வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • புதுவையில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், நீர்பாசனம், ஏரி கரைகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடம் கடன் பெற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • இதுவரை ரூ.76 கோடி கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், நீர்பாசனம், ஏரி கரைகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடம் கடன் பெற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    சட்டசபை அமைச்சர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன், பொது மேலாளர் நசியாநிசாமுதீன், துணை உதவி பொது மேலாளர் பாலமுருகன், புதுவை நபார்டு வழங்கி துணை மேலாளர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மொத்தம் ரூ.120 கோடி கடன் வழங்க அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை ரூ.76 கோடி கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.44 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என நபார்டு வழங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். அடுத்த ஆண்டுக்கு ரூ.120 கோடிக்கான திட்டங்களை அனுப்பலாம் என்றும் நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

    முதியோர், விதவைகள், முதிர்கன்னி உட்பட பயனாளிகளுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால், நாராயணன், புவனேஸ்வரன், சந்துரு, அருண்குமார், நாராயண சாமி, சங்கர், குப்பன், நாகராஜ், எத்திராஜ், வினோத், சதீஷ், சரவணன், சிவா, அணிமாஷ், கணபதி, செல்லாவ, ராமதாஸ்நாயுடு, சங்கர், ரவி, கிருஷ்ண ராஜ், முரளிகுப்தா, கலைச்செ ல்வி, கலாவதி குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • சமூக முன்னேற்றக் குறியீட்யீ டின் படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை, லட்சத்தீவு மற்றும் கோவா ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    சமீபத்தில் போட்டித்தி றன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான நிறுவனம் தயாரித்து, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுவை, லட்சத்தீவு, கோவா ஆகிய யூனியன் பிரேதேசங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

    சமூக முன்னேற்றக் குறியீட்யீ டின் படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை, லட்சத்தீவு மற்றும் கோவா ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன என்றும், அதே நேரத்தில் ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை மோசமாக உள்ளன என்று பிரதமருக்கான பொருளா தார ஆலோசனைக் குழுதெரிவித்துள்ளது.

    இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள்' என்ற தலைப்பிலான அறிக்கையில், ஐஸ்வால் (மிசோரம்), சோலன் (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் சிம்லா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவை சிறந்த 3 மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், குடிநீர், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பத்தைப் பயன்படுத்துதல், தங்குமிடம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தரமான சூழலை உறுதி செய்தல் போன்ற பல்வேறு சமூக முன்னேற்றக் குறிகாட்டி களின் அடிப்படையில் இந்தியாவின் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 707 மாவட்டங்களை இந்த அறிக்கை குறியீட்டின்படி தரவரிசைப்படுத்துகிறது.

    அந்த அறிக்கையின் குறியீட்டின்படி, புதுவை நாட்டிலேயே அதிகபட்சமாக 65.99 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சமூக முன்னேற்றத்தின் 3 பரிமாணங்களான அடிப்படை மனித தேவைகள், நல்வாழ்வின் அடித்தளங்கள் மற்றும் வாய்ப்புகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்திறனை மதிப்பி ட்டுள்ளது.

    அறிக்கையின்படி, மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் புதுவை சுகாதாரம், குடிநீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் சிறந்த செயல்திறன் கொண்ட முதல் 4 மாநிலங்களில் ஒன்றாக வந்துள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்ததும், அரசின்

    செயல்திறனும் இதற்கு முக்கிய காரணம். இது முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் காணொலியில் நடந்தது.
    • கூட்டத்தில் நீர்மோட்டார், சமையல் செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள், ஷார்ப்னர் ஆகியவற்றின் வரியை 18 சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் காணொலியில் நடந்தது.

    கூட்டத்தில் புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன், வணிக வரித்துறை ஆணையர் ராஜசேகர் பங்கேற்றனர். கூட்டத்தில் நீர்மோட்டார், சமையல் செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள், ஷார்ப்னர் ஆகியவற்றின் வரியை 18 சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.

    அப்போது பேசிய அமைச்சர் லட்சுமி நாராய ணன், புதுவை விவசயிகள் நலனை கருத்தில் கொண்டு சமையல் உபகரணங்கள் வரியை 12 சதவீதமாக வசூலிக்கவும், மாநில நிதி பற்றாக்குறையை கவத்தில் கொண்டு மத்திய அரசு அளித்து வரும்

    ஜி.எஸ்.டி. இழப்பீடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    • புதுவை அரசு சார்பில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • வ.சுப்பையா- சரஸ்வதி சுப்பையா நினைவு சமூக விஞ்ஞான ஆய்வு மைய நூலகத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு நாள்  அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, நெல்லித்தோப்பு சந்திப்பில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன், சுப்பையா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரதேச செயலாளர் ராஜாங்கம், பெருமாள், சி.ஐ.டி.யூ. சேதுசெல்வம், கலைஇலக்கிய பெருமன்றம் துரைசெல்வம் எல்லை சிவக்குமார், உள்பட பலர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல், புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெள்ளாழ வீதியில் உள்ள வ.சுப்பையா- சரஸ்வதி சுப்பையா நினைவு சமூக விஞ்ஞான ஆய்வு மைய நூலகத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் கந்தன் என்ற சிவராசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    • புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டிடம் தியாகராஜா வீதியில் அமைந்துள்ளது.
    • ரூ.97 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டிடம் தியாகராஜா வீதியில் அமைந்துள்ளது.

    இந்த கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. அதில் குடியிருந்தோருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பாழடைந்த குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கவும், புதிதாக கட்டிடம் கட்டி எழுப்பவும் குடியிருப்புவாசிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய மூன்றடுக்கு கொண்ட குடியிருப்பு கட்ட ரூ.97 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்டது.

    இதற்கான பூமிபூஜை  நடைபெற்றது.பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி–நாராயணன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆலய அறங்காவலர் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புது டெல்லியில் மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மாநாடு, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்தது.
    • புதுவையில் 837 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உள்ளன. அதில் 448 சங்கங்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன.

    புதுச்சேரி:

    புது டெல்லியில் மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மாநாடு, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்தது.

    மாநாட்டில், புதுவை அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கூட்டுறவுத் துறை செயலர் நெடுஞ்செழியன் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-

    புதுவையில் 837 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உள்ளன. அதில் 448 சங்கங்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. 37 சங்கங்கள் செயலற்று உள்ளன. 352 சங்கங்கள் நிதி சிக்கல் போன்ற பல்வேறு நிர்வாக காரணங்களால் கலைக்கப்பட்டு விட்டன.கூட்டுறவு துறை மூலம் மேலும் 3 கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    நபார்டு வங்கி நிதியுதவி யுடன் வேளாண்மை கடன் சங்கங்களை கணினிம யமாக்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ஒரு நிலைக்குழுவை அமைக்க உத்தேசித்துள்ளோம். செயலிழந்த தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கான செயல் திட்டம் தீட்டப்படுகிறது.கூட்டுறவு சங்கங்களின் நீண்ட கால நலனுக்காக நபார்டு போன்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

    திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட வேண்டும்.சென்ற ஆண்டு திருப்பதியில் நடைபெற்ற தென் மாநிலங்கள் கூட்டத்தில் புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் நலிவடைந்து மூடப்படும் நிலையில் உள்ள கூட்டுறவு துறை சார்ந்த நிறுவனங்களை புனரமைக்கவும் மேம்படுத்தவும் புதிதாக உருவாக்கவும் ரூ. 500 கோடி தேவை என வலியுறுத்தினார்.

    இத்தொகையை மத்திய அரசு தர வேண்டும்.லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை மற்றும் நூற்பாலைகளை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் ரூ.80 கோடி தேவைப்படுகிறது.

    நெசவாளர் சங்கங்க ளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தறிகளை நவீனப்படுத்த ரூ.5 கோடி, பாண்டெக்ஸ் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பாண்பேப்பின் இதர நிறுவனங்களுக்கு ரூ. 25 கோடி, வீட்டு வசதித் துறைக்கு ரூ. 75 கோடி, பால்வளத் துறைக்கு ரூ.80 கோடி, கான்பெட், அமுதசுரபி உள்ளடக்கிய நுகர்வோர் துறைக்கு ரூ.75 கோடி தேவைப்படுகிறது.

    நியாய விலைக் கடைகள் சங்கம், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி கூட்டமைப்பு மற்றும் பல்நோக்கு சேவை வழங்குநர் சங்கங்களின் மறுமலர்ச்சிக்கு 20 கோடி ரூபாய் தேவை. இத்தொகையை மத்திய அரசு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
    • 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    அசோக்பாபு(பா.ஜனதா):- அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

    அமைச்சர் லட்சுமிநாராயணன்:- ஏற்கனவே அரசு துறைகளில் 9 சட்ட அதிகாரிகள் உள்ளனர். மேலும் 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அசோக்பாபு:- அரசு துறைகளில் வழக்குகள் அதிகமாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு துறைக்கும் தனியாக சட்ட ஆலோசகர் தேவைப் படுகிறது. இதை நேர்முக தேர்வு மூலம் வக்கீலை தேர்வு செய்வது சரியான நடைமுறையல்ல.

    லட்சுமிநாராயணன்:- ஐகோர்ட்டு சட்ட அதிகாரிகளை தேர்வு செய்ய சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன்படி தான் நேர்முகத்தேர்வு நடத்துகிறோம். இருப்பினும் முதல்-அமைச்சருடன் கலந்துபேசி தளர்வுகளை ஏற்படுத்தலாம்.

    நேரு:- அரசு சொத்துக்களை சிலர் அபகரித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடவடி க்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. விரைவாக சட்ட ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

    அசோக்பாபு:- ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிவிட்டது. இன்னும் அரசு வக்கீல், அரசு பிளீடர் நியமிக்கவில்லை. கடந்த ஆட்சியில் உள்ளவர்களே தொடர்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வக்கீல்களை மாற்றுவதுதான் வழக்கம். எனவே உடனடியாக புதிய வக்கீல்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • விநாயகம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் திட்டத்துக்காக ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • நபார்டு வங்கியில் கடன்பெற்று த்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    அங்காளன் (சுயே):- விநாயகம்பட்டு கிராமத்து க்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதா? எந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது? இந்த ஆண்டு கட்டி தரப்படுமா?

    அமைச்சர் லட்சுமி நாராயணன்:- விநாயகம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் திட்டத்துக்காக ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அங்காளன்:- கடந்த சட்டமன்ற கூட்டத்திலும் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள்? அடுத்த கூட்டம் வந்தும் கட்டித்தர வில்லை. திருபுவனை தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    அமைச்சர்:- நபார்டு வங்கியில் கடன்பெற்றுத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதில் சில சிக்கல்கள் இருந்தது. தற்போது அனைத்தும் நீங்கியுள்ளது.

    சாலை, குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இனி காலதாமதம் ஏற்படாது. விரைவில் கட்டித்தருவோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×