search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி-அமைச்சர் லட்சுமிநாராயணன் பெருமிதம்
    X

    கோப்பு படம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி-அமைச்சர் லட்சுமிநாராயணன் பெருமிதம்

    • புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • சமூக முன்னேற்றக் குறியீட்யீ டின் படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை, லட்சத்தீவு மற்றும் கோவா ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    சமீபத்தில் போட்டித்தி றன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான நிறுவனம் தயாரித்து, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுவை, லட்சத்தீவு, கோவா ஆகிய யூனியன் பிரேதேசங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

    சமூக முன்னேற்றக் குறியீட்யீ டின் படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை, லட்சத்தீவு மற்றும் கோவா ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன என்றும், அதே நேரத்தில் ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை மோசமாக உள்ளன என்று பிரதமருக்கான பொருளா தார ஆலோசனைக் குழுதெரிவித்துள்ளது.

    இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள்' என்ற தலைப்பிலான அறிக்கையில், ஐஸ்வால் (மிசோரம்), சோலன் (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் சிம்லா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவை சிறந்த 3 மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், குடிநீர், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பத்தைப் பயன்படுத்துதல், தங்குமிடம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தரமான சூழலை உறுதி செய்தல் போன்ற பல்வேறு சமூக முன்னேற்றக் குறிகாட்டி களின் அடிப்படையில் இந்தியாவின் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 707 மாவட்டங்களை இந்த அறிக்கை குறியீட்டின்படி தரவரிசைப்படுத்துகிறது.

    அந்த அறிக்கையின் குறியீட்டின்படி, புதுவை நாட்டிலேயே அதிகபட்சமாக 65.99 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சமூக முன்னேற்றத்தின் 3 பரிமாணங்களான அடிப்படை மனித தேவைகள், நல்வாழ்வின் அடித்தளங்கள் மற்றும் வாய்ப்புகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்திறனை மதிப்பி ட்டுள்ளது.

    அறிக்கையின்படி, மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் புதுவை சுகாதாரம், குடிநீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் சிறந்த செயல்திறன் கொண்ட முதல் 4 மாநிலங்களில் ஒன்றாக வந்துள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்ததும், அரசின்

    செயல்திறனும் இதற்கு முக்கிய காரணம். இது முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×