search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும்-அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும்-அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்

    • புது டெல்லியில் மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மாநாடு, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்தது.
    • புதுவையில் 837 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உள்ளன. அதில் 448 சங்கங்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன.

    புதுச்சேரி:

    புது டெல்லியில் மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மாநாடு, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்தது.

    மாநாட்டில், புதுவை அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கூட்டுறவுத் துறை செயலர் நெடுஞ்செழியன் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-

    புதுவையில் 837 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உள்ளன. அதில் 448 சங்கங்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. 37 சங்கங்கள் செயலற்று உள்ளன. 352 சங்கங்கள் நிதி சிக்கல் போன்ற பல்வேறு நிர்வாக காரணங்களால் கலைக்கப்பட்டு விட்டன.கூட்டுறவு துறை மூலம் மேலும் 3 கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    நபார்டு வங்கி நிதியுதவி யுடன் வேளாண்மை கடன் சங்கங்களை கணினிம யமாக்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ஒரு நிலைக்குழுவை அமைக்க உத்தேசித்துள்ளோம். செயலிழந்த தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கான செயல் திட்டம் தீட்டப்படுகிறது.கூட்டுறவு சங்கங்களின் நீண்ட கால நலனுக்காக நபார்டு போன்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

    திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட வேண்டும்.சென்ற ஆண்டு திருப்பதியில் நடைபெற்ற தென் மாநிலங்கள் கூட்டத்தில் புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் நலிவடைந்து மூடப்படும் நிலையில் உள்ள கூட்டுறவு துறை சார்ந்த நிறுவனங்களை புனரமைக்கவும் மேம்படுத்தவும் புதிதாக உருவாக்கவும் ரூ. 500 கோடி தேவை என வலியுறுத்தினார்.

    இத்தொகையை மத்திய அரசு தர வேண்டும்.லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை மற்றும் நூற்பாலைகளை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் ரூ.80 கோடி தேவைப்படுகிறது.

    நெசவாளர் சங்கங்க ளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தறிகளை நவீனப்படுத்த ரூ.5 கோடி, பாண்டெக்ஸ் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பாண்பேப்பின் இதர நிறுவனங்களுக்கு ரூ. 25 கோடி, வீட்டு வசதித் துறைக்கு ரூ. 75 கோடி, பால்வளத் துறைக்கு ரூ.80 கோடி, கான்பெட், அமுதசுரபி உள்ளடக்கிய நுகர்வோர் துறைக்கு ரூ.75 கோடி தேவைப்படுகிறது.

    நியாய விலைக் கடைகள் சங்கம், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி கூட்டமைப்பு மற்றும் பல்நோக்கு சேவை வழங்குநர் சங்கங்களின் மறுமலர்ச்சிக்கு 20 கோடி ரூபாய் தேவை. இத்தொகையை மத்திய அரசு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×