search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை- குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    X

    சாலை- குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

    • விநாயகம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் திட்டத்துக்காக ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • நபார்டு வங்கியில் கடன்பெற்று த்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    அங்காளன் (சுயே):- விநாயகம்பட்டு கிராமத்து க்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதா? எந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது? இந்த ஆண்டு கட்டி தரப்படுமா?

    அமைச்சர் லட்சுமி நாராயணன்:- விநாயகம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் திட்டத்துக்காக ரூ.2.85 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அங்காளன்:- கடந்த சட்டமன்ற கூட்டத்திலும் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள்? அடுத்த கூட்டம் வந்தும் கட்டித்தர வில்லை. திருபுவனை தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    அமைச்சர்:- நபார்டு வங்கியில் கடன்பெற்றுத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதில் சில சிக்கல்கள் இருந்தது. தற்போது அனைத்தும் நீங்கியுள்ளது.

    சாலை, குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இனி காலதாமதம் ஏற்படாது. விரைவில் கட்டித்தருவோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×