என் மலர்
நீங்கள் தேடியது "kajal aggarwal"
ஓராண்டுக்கு மேலாக முடங்கி இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் இயக்குனர் ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக முடங்கி உள்ளது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவரால் மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது, இதன்காரணமாக அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் காஜல் அகர்வால். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இவர் கடந்த ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஒரு முன்னணி நடிகை இப்படியா நடந்துகொள்வது என ரசிகர்கள் பலர் திட்டி கமென்ட் செய்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்' படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

இதுதவிர ஜெயம் ரவியுடன் இணைந்து `கோமாளி' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கமல்ஹாசனின் `இந்தியன் 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படம் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஜூனில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வரும் நிலையில், படம் மீண்டும் துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கிய நிலையில் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகா நிறுவனதே ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.
இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தேர்தல் முடிந்த பிறகும் படப்பிடிப்பு இன்னமும் துவங்கப்படவில்லை. படத்தை தயாரிக்க ஒப்பந்தமான லைகா புரொடக்ஷன்ஸ் பின்வாங்கியதால், படத்தை வேறு நிறுவனத்தை வைத்து தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ரிலையன்ஸ நிறுவனம் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நடிகைகள் பலர் விளம்பரங்களில் நடிப்பது மற்றும் விழாக்களுக்கு செல்வது போல், நடிகை காஜல் அகர்வால் சூதாட்ட கிளப்பிற்கு சென்றுள்ளார். #KajalAggarwal
நடிகைகள் சினிமாவில் நடிப்பது மட்டும் அல்லாமல் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விளம்பரங்களில் நடிப்பதில் சமந்தா, காஜல் அகர்வால் இருவருக்கும் இடையில்தான் தற்போது போட்டி நிலவுகிறது. சில ஆண்டுகளாக காஜல் நடித்து வந்த ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்தை சமந்தா கைப்பற்றினார்.
விளம்பரம் மட்டும் அல்லாது வேறு வகையிலும் ஹீரோயின்கள் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இந்தி கதாநாயகிகள் பெரிய பணக்காரர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வாங்குகின்றனர்.

தற்போது சூதாட்ட கிளப்பிற்கு வருவதற்கும் அவர்களுக்கு பணம் கொடுக்கும் விஷயம் வெளியாகி உள்ளது. இலங்கையில் பிரபலமான கேசினோ (சூதாட்ட கிளப்) உள்ளது. இந்த கிளப்பிற்கு வந்து வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு பாலிவுட் நடிகைகளுக்கு கோடிகளில் கொட்டித் தரப்படுகிறது. சமீபத்தில் இந்த சூதாட்ட கிளப்புக்கு காஜல் அகர்வால் சென்று வந்து இருக்கிறார்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டு மிராண்டித்தனம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். #KajalAggarwal #SriLankaBlasts
இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் ஏராளமானோர் உடல் சிதறி பலியானார்கள், இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது.

உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இழப்பின் ஆழத்தைக்கூட என்னால் யூகிக்க இயலவில்லை. இறைவன் நம்முடன் இருப்பாராக. சில நாட்களுக்கு முன்னதாக நான் இலங்கையில் இருந்தேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் எங்கும் இவ்வளவு வெறுப்பு? மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது. மறைந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்’. இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு தரப்பு பிரச்சனையால், படத்திற்கு சிக்கல் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.
இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

நாளை தேர்தல் நடைபெற்று முடிவுகள் மே 23-ந் தேதி வெளியாக இருக்கின்றன. எனவே கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட லைகா புரொடக்ஷன்ஸ் படத் தயாரிப்பில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேறு தயாரிப்பு நிறுவத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஜூன், ஜூலையில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்குள் படத்தில் கமல் இடம்பெறும் காட்சிகளை படம் பிடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தனது நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி தனக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். #KajalAggarwal
காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கோமாளி படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:-
“தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதில் தான் இப்போது ஆர்வமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கை இத்தனை காலமும் எந்த அதிருப்தியும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே கடந்துள்ளது. முதல் படத்தில் இருந்தே பெரிய இயக்குனர்கள் கதாநாயகர்கள் பார்வை என்மீது விழுந்தது. அவர்களுடன் பணியாற்றியதால் தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். சினிமாவில் நம்மால் நிலையாக இருக்க முடியுமா என்ற பயம் எப்போதுமே ஏற்பட்டது இல்லை. அந்த அளவுக்கு தொடர்ந்து கைநிறைய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

நல்லதோ கெட்டதோ நான் எடுத்த எல்லா முடிவுகளுமே நல்ல பலனைத்தான் கொடுத்தது. இது ஓடுமா? ஓடாதா? என்றெல்லாம் யோசிக்காமல் சொன்ன உடனே ஒப்புக்கொண்டேன். அதுகூட என்னை பெரிய இடத்தில்தான் கொண்டுபோய் வைத்தது. இந்த நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி இப்போது எனக்கு அதிகமாகி இருக்கிறது. நெருக்கடியை எதிர்கொள்ளும் தைரியமும் எனக்கு இருக்கிறது.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். #KajalAggarwal
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். #KajalAggarwal
காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:-
“என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன். தமிழில் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் ஆக தயாராகி உள்ளது.
சமீபகாலமாக இளம் கதாநாயகர்களுடன் அதிகம் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரோடு நடிக்கிறேன் என்பதை விட என்னமாதிரி கதாபாத்திரங்கள் தேர்வு செய்கிறேன் என்பது தான் முக்கியம். நல்ல கதை, கதாபாத்திரம் இருந்தால் எந்த நடிகர்களுடன் வேண்டுமானாலும் நடிப்பேன்.

சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன்.
நல்ல விஷயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் `இந்தியன் 2' படம் பணப் பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Indian2 #KamalHaasan
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக தன் மகனையே கொல்லும் சுதந்திர போராட்ட வீரராக நடித்து இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இதன் 2-ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர்.
இந்தியன் 2 என தலைப்பிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பட பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே இல்லாமல் நிற்கிறது.
படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப்போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக பொருந்தவில்லை என்கிறார்கள். அவருக்கு மேக்கப்பினால் அலர்ஜியாகி உள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கு, தயாரிப்பு நிறுவனம் பணத்தை தயார் செய்துவருகிறது. அந்த நிறுவனம் சீனாவில் வெளியிடும் 2.0 படம் வெளியானால் நல்ல பலன் தரும் என்று காத்திருக்கிறார்கள்.

மீண்டும் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களிடம் தேதிகள் வாங்க வேண்டும். தற்போதைக்கு தேர்தல் முடியும் வரை கமல், தன் அரசியல் பயணத்தில் பிசியாகி உள்ளார். இதனால், தேர்தல் முடிந்து கமல் மீண்டும் நடிக்க திரும்ப வேண்டும். அதற்குள் அவரும், தன் உடலை ‘இந்தியன்2’ படத்துக்காக மாற்ற வேண்டும்.
இந்த தகவல்களை எல்லாம் வைத்து படக்குழுவிடம் விசாரித்தால், “எவ்வித பிரச்சினையுமே இல்லையே. மீண்டும் விரைவில் தொடங்குவோம்“ என்கிறார்கள்.
படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை. #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வயது பற்றி கவலை இல்லை என்று கூறியிருக்கிறார். #KajalAggarwal
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்த காஜல் அகர்வால், அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போவதால் சற்று வருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் சொல்ல தயங்குவார்கள்.
அதிலும் குறிப்பாக நடிகைகள் வயதை பற்றி பேசவே மாட்டார்கள். நான் அப்படி கிடையாது. என் நிஜ வயதை மறைக்க விரும்பவில்லை. வயதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. படங்களில் தங்களை மிகவும் வயது குறைந்தவர்கள் போன்று காட்ட நடிகைகள் கஷ்டப்படுகிறார்கள். என்னிடம் வயதை கேட்டால் நிஜத்தை விட கூடுதலாக 10 ஆண்டை சேர்த்து சொல்லவும் நான் தயார்.

சினிமாவில் நான் 10 ஆண்டுகளாக இருந்ததால் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. வேறு எந்த துறையிலும் இந்த அளவுக்கு அனுபவம் கிடைக்காது. எனக்கு 30 ஆண்டு கால அனுபவம் 10 ஆண்டுகளில் கிடைத்துள்ளது. அதனால் வயது பற்றி கவலை இல்லை. எந்த பிரச்சனை வந்தாலும் பதட்டப்படாமல் நிதானமாக யோசித்து தீர்வு காணும் பக்குவம் வந்துவிட்டது.’ என்று கூறியுள்ளார்.